அன்டிஜென் சோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டவர் கொரோனாவால் பலி..! - Sri Lanka Muslim

அன்டிஜென் சோதனையில் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டவர் கொரோனாவால் பலி..!

Contributors

கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலுள்ள வெளி நோயாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் தொற்றில்லை என உறுதியான நோயாளர் ஒருவர் சில மணிநேரங்களுக்குள் கொவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய பெல்போலஹேனா பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட நபரே இவ்வாறு உயிரிழந் துள்ளார். அவர் கொழும்பில் கட்டிட நிர்மாணப் பணி புரிபவராவார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் இருமல் மற்றும் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினார்.

இருப்பினும், அப்பகுதியின் பொதுச் சுகாதார பரிசோதகர் அவருக்கு தனி அறையைப் பயன்படுத்தவும் ஏனையவர்களுடன் தொடர்பில் இல்லாமல் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி யுள்ளார்.

குறித்த நபரின் உடல்நிலை இரவில் மோசமடைந்த துடன், கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையின் போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலே மரணத்திற்கான காரணம் எனக் கண்டறியப் பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team