அன்வர் இப்ராஹிம் விடுதலை » Sri Lanka Muslim

அன்வர் இப்ராஹிம் விடுதலை

anvar malasia

Contributors
author image

Editorial Team

மலேஷியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல்வாதியான அன்வர் இப்ராஹிம், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, நேற்று (16) விடுதலை செய்யப்பட்டார். இது, மலேஷியாவில் ஏற்பட்ட அண்மைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மாற்றமாகக் காணப்படுகிறது.

மலேஷியாவின், “இயற்கைக்கு மாறான புணர்ச்சி” தொடர்பான சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அன்வர், தற்போது 3 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியாவின் ஆளுங்கட்சியாக இருந்த கட்சி, 6 தசாப்தங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பிரதமராக 2 தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தற்போது அன்வருடன் இணைந்துள்ள மஹதீர் மொஹமட் கூட்டணியின் வெற்றியே, மலேஷிய அரசியல் நிலைமையை மாற்றியது.

அன்வர் மீதான குற்றச்சாட்டுகள், அரசியல் காரணமாகச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றே கருதப்பட்டன.

தற்போது பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹதீர் மொஹமட், ஓரிரு ஆண்டுகளுக்கே பிரதமராகப் பதவி வகிக்கவுள்ளார் என அறிவித்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக, அன்வர் பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்ட போது, அன்வரின் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிலையில், இன்னும் ஓரிரு ஆண்டுகளில், நாட்டின் பிரதமராக அவர் பதவியேற்பார் என்பது, எதிர்பார்க்கப்படாத திருப்பமாக அமைந்துள்ளது.

Web Design by The Design Lanka