அன்வர் முஸ்தபா அதாவுல்லாவுடன் இணைவு » Sri Lanka Muslim

அன்வர் முஸ்தபா அதாவுல்லாவுடன் இணைவு

an.jpeg2

Contributors
author image

M.Y.அமீர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  செயற்பாட்டாளரும் கடந்த பொதுத்தேர்தலின்போது திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் முதலாம் இலக்கத்தில் போட்டியிட்டவரும் சிம்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவருமான அன்வர் முஸ்தபா   தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் கரங்களைப்பற்றி தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

“காலம் கழியும் உண்மை ஒளிரும்” சத்தியம் மட்டுமே நித்தியம் எனும் தலைப்பில், கல்முனை அல் றூபி ஹோட்டேல் கேட்போர் கூடத்தில் 2017-10-09 ஆம் திகதி இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே பத்திரிகையாளர் முன்னிலையில் மேற்படி கட்சிதாவல் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்குமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய கொள்கைபரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான முகம்மட் பஹீஜ் கிழக்கு மாகாண கொள்கைபரப்புச் செயலாள அகமட் புர்கான் மற்றும் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

an an.jpeg2 an.jpeg2.jpeg3

Web Design by The Design Lanka