அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் – ஜனாதிபதி » Sri Lanka Muslim

அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் – ஜனாதிபதி

Maithripala

Contributors
author image

ஜனாதிபதி ஊடகப்பிரிவு

நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை இம்முறை தேர்தலில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

நேற்று (11) பிற்பகல் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு பயணத்தின் ஆரம்ப அடியாக இத்தேர்தலில் மக்கள் மிகுந்த பொறுப்புடன் தமது கடமையை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய அரசியல் தலைவர்களினது பயணத்தின் ஆரம்பம் என்ற வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நல்லொழுக்கமுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உள்ளூராட்சி நிறுவனங்களில் நேர்மையான மக்கள் சார்பு பிரதிநிதிகளை உருவாக்குவதன் மூலம் முழு அரசியல் கலாசாரத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தவறிழைக்க இடமளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த பொறுப்பை கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மொரகஸ்வெவ, உள்பத்வெவ, கிரித்தலே, உள்கட்டுபொத, ஹத்ஹம்பத்துவ, சிறிகெத்த, ஹிங்குராங்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இந்த சந்திப்பின்போது இணைந்துகொண்டனர்.

பிரதேசத்தில் உள்ள மகா சங்கத்தினர் மற்றும் சமயத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka