அப்துல் அஸீஸ் மீண்டுமொருமுறை சர்வதேசத்தில் இலங்கைக்கும் கல்முனை மண்ணுக்கும் கீர்த்தியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் - ஆரிப் சம்சுடீன் - Sri Lanka Muslim

அப்துல் அஸீஸ் மீண்டுமொருமுறை சர்வதேசத்தில் இலங்கைக்கும் கல்முனை மண்ணுக்கும் கீர்த்தியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் – ஆரிப் சம்சுடீன்

Contributors
author image

M.M.A.Samad

கல்முனைத் தாய் பெற்றெடுத்த தூதுவர் அப்துல் அஸீஸ் மீண்டுமொருமுறை சர்வதேசத்தில் இலங்கைக்கும் கல்முனை மண்ணுக்கும் கீர்த்தியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்துள்ளார்.

 

2014ஆம் ஆண்டுக்கான ஜீ 77 நாடுகள்; குழுவின் வியன்னா அலுவலகத்திற்கான தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஒஸ்ரியா நாட்டின்  இலங்கைக்கான தூதுவர் ஏ.எல். அப்துல் அஸீஸ் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (ஐஏஈஏ) தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினையிட்டு தூதுவர் அப்துல் அஸீஸுக்கு அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சல் வாழ்த்துச் செய்தியிலேயே மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்; அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

 

சர்வதேசத்தில இலங்கைக்கு பெரும்பான்மையினரைச் சேர்ந்த பல நபர்களினால் புகழ் கிடைத்துள்ளது. ஆனால் இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகளினால் பெருமை கிடைக்கப்பெற்றது என்பது அறிது.

 

அவ்வாறு இருந்தபோதிலும,; கிழக்கு மாகாணத்தின் கல்முனைத் தாய் பெற்றெடுத்த இம்மண்ணிண் மைத்தரினால் இந்தநாடும் கல்முனை மண்ணும் பெருமைகொள்வதையிட்டு முதற்கண் இறைவனைப் புகழ்கின்றோம்.

 

சர்வதேசத்தில் ஒரு அமைப்பிற்கு தலைமைவகிப்பதென்பது இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாததொன்று. ஆனால், அத்தகைய பெற்றுக்கொள்ள முடியாத தலைமைப் பொறுப்பு தங்களுக்குக் கிடைத்திருப்பதையிட்டு இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் குறிப்பாக கல்முனை மக்கள் ஆனந்தமடைவார்கள் என்று நம்புகின்றேன். அத்தோடு பாராட்டும் மனப்பாங்கு கொண்ட மக்களின் பாராட்டுதல்களுக்கு உங்களை வந்து சேரும் என்று எதிர்பார்க்கின்றேன்.

 

77 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜீ 77 நாடுகளுக்கான குழுவின் வியன்னா அலுவலகத்தின் 2014ஆம் ஆண்டுக்கான தலைமைத்துவ பொறுப்பை இவ்வருடத்தின் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட நீங்கள் 162 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு மீண்டுமொருமுறை இலங்கைக்கும் கிழக்கின் கல்முனை மண்ணுக்கும் சர்வதேசத்தில் பெறுமை தேடிக்கொடுத்துள்ளீர்கள்.

 

மேலும், கல்முனை ஸாகிறாவின் பழைய மாணவரான உங்களை நானும் கல்முனை ஸாகிறாவின் பழைய மாணவன் என்ற ரீதியிலும் அம்பாறை மாவட்ட மக்களின் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையிலும் குறிப்பாக கல்முனை மக்கள் சார்பிலும் வாழ்த்திப் பாராட்டுவதோடு நாட்டுக்கும் இம்மண்ணுக்கும் மென்மேலும் உங்களது சேவையினால் கீர்த்தி கிடைக்க வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றேன்.

 

ஒஸ்ரியா நாட்டின்  இலங்கைக்கான தூதுவர் ஏ.எல். அப்துல் அஸீஸ் கல்முனைப் பிராந்தியத்தில் பல ஆங்கிலப் புலமையாளர்களை உருவாக்கிய பெறுமைக்குரிவர் என்பதோடு பல சர்வதேச நாடுகளில் பணியாட்டியுள்ளதுடன், இலங்கை வெளிநாட்டு சேவையில் சிரேஷ்ட தரம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team