‘அப்பாவிகள் கைதாவதை ஏற்க முடியாது’ - முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்! - Sri Lanka Muslim

‘அப்பாவிகள் கைதாவதை ஏற்க முடியாது’ – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!

Contributors

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளைக் கைது செய்வதாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப், அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ படகு ஓட்டுநரையோ கைது செய்ய முடியாது  என்றார்.

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்கள் 100 வருடங்களுக்கு மேலாக அங்கிகரிக்கப்படாத பாதையில் பயணித்திருக்கிறார்கள். இதற்காக அனுமதியளித்தவர்களையும் படகு ஓட்டிகளையும் சிறையில் அடைக்க முடியாது.

“இந்தப் பால புனரமைப்புக்கான கால தாமதம் ஏன்? இதன் பிண்ணனி என்ன என்பதை நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். இந்தப் புனரமைப்புக்கான கொந்தராத்து வேலைகள் இரு கம்பனிகளிடம் கைமாற்றப்பட்ட நிலையில், மூன்று கோடி ரூபாய் பணமும் கைமாற்றப்பட்டுள்ளது.

“இந்த விடயத்தில் அரசியல் குளிர்காய்வதற்கு எனக்கு விருப்பமில்லை. 6 மாதங்களாக புனரமைப்புப் பணிகள் கொமிசன் என்ற பேரில் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக, அப்பாவிகளை சிறைக்குத் தள்ளி, தங்களை நியாயயப்படுத்துவதில் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்” என்றார்.


Web Design by Srilanka Muslims Web Team