அப்பிள் ஸ்டோரின் புதிய சாதனை - Sri Lanka Muslim
Contributors

அப்பிள் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மொபைல் மற்றும் கணனி சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை கொண்டுள்ள அப்பிள் ஸ்டோரானது புதிய சாதனை படைத்துள்ளது

அதாவது அமெரிக்க அப்பிள் ஸ்டோரில் தற்போது 1,006,557 எண்ணிக்கையான தரவிறக்கம் செய்யக்கூடிய அப்பிளிக்கேஷன்களை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்தளமானது 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்ததுடன் தற்போது ஐந்தரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவ்வளவு எண்ணிக்கையான அப்பிளிக்கேஷன்களை எட்டியுள்ளது.

இதேநேரம் 50 மில்லியன் அப்பிளிக்கேஷன்கள் தரவிறக்கம் செய்யப்படுவதை கொண்டாடவுள்ள அப்பிள் ஸ்டோர் 50 மில்லியனாவது அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்பவருக்கு 10,000 டொலர்கள் பெறுமதியான பரிசினை வழங்க காத்திருக்கின்றது.

Web Design by Srilanka Muslims Web Team