அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் 100 பில்லியனையும், தொழிற்படு இலாபம் 1 பில்லியனையும் தாண்டியது - Sri Lanka Muslim

அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் 100 பில்லியனையும், தொழிற்படு இலாபம் 1 பில்லியனையும் தாண்டியது

Contributors

அமானா வங்கி, தனது துரித வளர்ச்சிக்கு சான்று பகிரும் மைல்கல்லாக, வங்கித் தொழிற்பாடுகளில் 9 வருடத்தை மாத்திரம் நிறைவு செய்த நிலையில் 2020 ஆம் நிதியாண்டுடில் மொத்த சொத்துகளில் ரூபா. 100 பில்லியன் தாண்டியது.

கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான சவால் நிலைக்கு முகங்கொடுத்த போதிலும், 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உறுதியான மீட்சியை வங்கி பதிவு செய்திருந்ததுடன், நான்காம் காலாண்டில் 51% வரிக்கு முந்திய இலாபமாக ரூபா. 372.1 மில்லியனை பதிவு செய்திருந்தது.

2019 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இந்தப் பெறுமதி ரூபா. 242.2 மில்லியனாக பதிவாகியிருந்தது. இக்காலப்பகுதியில் வரிக்குப் பிந்திய இலாபம் ரூபா. 213.3 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நான்காம் காலாண்டில் வங்கியின் வரிக்கு முந்திய மற்றும் வரிக்கு பிந்திய இலாபங்கள் முறையே 168% மற்றும் 167% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன.

வங்கியின் நான்காம் காலாண்டு பெறுபேறுகள் உயர்வடைந்திருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில், மொத்தமாக ரூபா. 761.4 மில்லியன் ரூபாயை வரிக்கு முந்திய இலாபமாகவும், வரிக்கு பிந்திய இலாபமாக ரூபா. 463.7 மில்லியன் ரூபாயையும் பதிவு செய்திருந்தது.

2019 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த வரிக்கு பிந்திய இலாபம் ரூபா. 460.9 மில்லியனுடன் ஒப்பிடுகையில், 2020 இல் வரிக்கு பிந்திய இலாபம் அதிகரித்திருந்தமை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

3.7% எனும் ஆரோக்கியமான நிதியீட்டு அளவுப் பெறுமதியைப் பேணியிருந்ததுடன், வங்கியின் நிகர நிதியீட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் அதிகரித்து ரூபா. 3.45 பில்லியனாக பதிவாகியிருந்தது.

நான்காம் காலாண்டில் மாத்திரம் இந்தப் பெறுமதி ரூபா. 1.13 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2019 நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 53% வளர்ச்சியாகும்.

Web Design by Srilanka Muslims Web Team