அமீர் ஜஹான் என்கிற 45 வயது ஏழைத் தாய் நான்கு நாள்களாக பட்டினி கிடந்து (video) » Sri Lanka Muslim

அமீர் ஜஹான் என்கிற 45 வயது ஏழைத் தாய் நான்கு நாள்களாக பட்டினி கிடந்து (video)

untitled_8_2282202-m

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முராதாபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீர் ஜஹான் என்கிற 45 வயது ஏழைத் தாய் நான்கு நாள்களாக பட்டினி கிடந்து குடியரசு நாள்(26. 01. 2018) அன்று பசியாலும் பனியாலும் இறந்துவிட்டிருக்கின்றார்.

முந்தைய இரவு அவருடைய அண்டை வீட்டுக்காரப் பெண்மணி ஷபானா பேகம் 6 சப்பாத்திகளைக் கொடுத்திருக்கின்றார். அவற்றைத் தம்முடைய மூன்று மகள்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டு வெறும் வயிற்றோடு படுக்கப் போய் இருக்கின்றார், அமீர் ஜஹான். அடுத்த நாள் மயங்கிக் கிடந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, இரண்டு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு மூச்சை விட்டிருக்கின்றார்.

அவருடைய கணவர் ரிக்ஷா ஓட்டி வந்தார். காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வேலை தேடி பூனா சென்றிருக்கின்றார். இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்ட பிறகும் எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்து விட்ட நிலையில் கடந்த 15 நாள்களாக அக்கம்பக்கத்தார் அளித்து வந்த உதவியைக் கொண்டு கால் வயிறும் அரை வயிறுமாக நாள்களை ஓட்டி வந்தோம் என்கிறார், மூத்த மகள் ரைஹானா.

இப்படி கிடைத்து வந்த உணவு முழுவதையும் மகள்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு நான்கு நாள்களாக வெறும் தண்ணீர் குடித்து வந்திருக்கின்றார் அமீர் ஜஹான். நாடே குடியரசு தினக் கொண்டாட்டத்தில் திளைத்துக்கொண்டிருந்த வேளையில் உயிரை விட்டிருக்கின்றார்.

நினைத்தாலே நெஞ்சம் விம்முகின்றது.

சாகப் போகின்ற அந்த நிமிடங்களில் அந்த ஏழைத்தாய் என்னவெல்லாம் நினைத்திருப்பார்?

எப்படியெல்லாம் பதறியிருப்பார்? எவற்றையெல்லாம் நினைத்து நினைத்து உருகியிருப்பார்?

தெரியவில்லையே..!

படம் : இறந்து போன ஏழைத்தாயின் ஆதார் அட்டை
முதல் பின்னூட்டங்களில் தி டெலிகிராஃப் நாளிதழில் வந்த செய்தியும் படங்களும்.

(video)

Web Design by The Design Lanka