அமெரிக்காவின் துணை மந்திரி ஆனார் இந்தியப் பெண் நிஷா: செனட் ஒப்புதல்! - Sri Lanka Muslim

அமெரிக்காவின் துணை மந்திரி ஆனார் இந்தியப் பெண் நிஷா: செனட் ஒப்புதல்!

Contributors

 தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் துணை மந்திரி பதவிக்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா தேசாய் பிஸ்வால் என்ற பெண்ணை, கடந்த ஜூலை மாதம் அதிபர் ஒபாமா பரிந்துரை செய்தார்.

இதுதொடர்பாக செனட் சபையின் வெளியுறவு கமிட்டியில் விவாதிக்கப்பட்டது. அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிஷாவின் திறமையைப் பாராட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான துணை மந்திரியாக நிஷா தேசாய் நியமிக்கப்படுவதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார்.

ராபர்ட் பிளேக் வகித்து வந்த இந்தப் பதவிக்கு, முதல் முறையாக இந்திய வம்சா வழியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை இதுவரை அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களே வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தில், ஆசிய பிரிவுக்கான உதவி நிர்வாகியாக நிஷா தேசாய் பிஸ்வால் பணியாற்றி வருகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team