அமெரிக்கா இரட்டை கோபுரம் மீது கத்தார் தாக்குதல்: சவுதி அரேபிய ஊடக செய்தியால் பரபரப்பு » Sri Lanka Muslim

அமெரிக்கா இரட்டை கோபுரம் மீது கத்தார் தாக்குதல்: சவுதி அரேபிய ஊடக செய்தியால் பரபரப்பு

september 11

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


பயங்கரவாதிற்கு துணைபோவதாக கூறி வளைகுடாவைச் சேர்ந்த ஐந்து நாடுகள் கத்தார் நாட்டுடன் தூதரக உறவை முறித்துள்ளன. இந்நிலையில் , சவுதி அரேபியாவின் ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி, நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதில் கத்தாருக்கு தொடர்புள்ளதாக ஆவண படம் ஒன்றை ஒளிபரப்பியுள்ளது.

அதிர்வை ஏற்படுத்தியுள்ள “Qatar… The Road to Manhattan,” என்ற அந்த ஆவணக்குறிப்பில், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காலீத் ஷேக் முகமதுவுக்கு கத்தார் தொடர்ந்து ஆதரவளித்து நிதியுதவி செய்து வந்தததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு அமெரிக்க புலனாய்வுப் படை தோஹாவில் வைத்து காலீத்தை கைது செய்ய முயன்றதாகவும் கத்தார் அமைச்சர் அப்துல்லா பின் காலீத் அல்தானி, அவரை ரகசியமாக தப்பச் செய்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கையில் தப்பிய காலீத், வகுத்த திட்டத்தால் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மன்ஹட்டன் இரட்டைக்கோபுரங்கள் விமானம் மோதி தகர்க்கப்பட்டன. அல்குவைதா தலைவர் பின்லேடனுக்கும் அமைச்சர் அல்தானிக்குமே தொடர்பு இருந்துள்ளது.

அமெரிக்க புலனாய்வுப் படை தோஹாவில் வைத்து காலீத்தை கைது செய்ய முயன்ற போது, இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையே நடந்த உரையயாடல்கள் கூட டாகுமென்ட்ரியில் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ, எப்.பி.ஐ, மற்றும் தேசிய புலனாய்வு முகமை என அழைக்கப்படும் என்.எஸ்.ஏ அதிகாரிகள் பேட்டியும் டாகுமென்ட்ரியில் இடம் பெற்றுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த காலீத், அல்குவைதா இயக்கத்தின் முக்கியத் தலைவர். 2003ம் ஆண்டு ராவல்பிண்டியில் வைத்து சி.ஐ.ஏ இவரை கைது செய்தது.

Web Design by The Design Lanka