அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாகயிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர்..! - Sri Lanka Muslim

அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாகயிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர்..!

Contributors

அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாகயிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர்- இராஜாங்க அமைச்சர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அங்கம் வகித்தவாறே இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டுசெல்லவேண்டும் என்றால் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டங்களில் அமைதியாகயிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் கருத்து தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பிரதமர் எடுத்த தீர்மானங்களை அவ்வாறானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team