அமைச்சர்களால் கடும் சீற்றமடைந்த கோட்டாபய - அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட குழப்பம்..? - Sri Lanka Muslim

அமைச்சர்களால் கடும் சீற்றமடைந்த கோட்டாபய – அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட குழப்பம்..?

Contributors

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கடும் அதிருப்தியில் இருப்பதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மூவரையும் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, கடுமையாக திட்டியுள்ளார் என அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கொள் காட்சி அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த செய்தியில்,

‘பொது முடக்கம்’ தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் வாய் திறக்காது, வெளியில்சென்று கூட்டறிக்கை விடுத்தமை தொடர்பிலேயே ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடியிருக்கலாம். அதைவிடுத்து இவ்வாறு கூட்டு பொறுப்பைமீறும் வகையில் செயற்படக்கூடாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அமைச்சர்கள் மூவரும் கடும் சீற்றமடைந்தனர் எனவும், அவர்களை அலரிமாளிக்கைக்கு அழைத்து விருந்து வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க் சமரசப்படுத்தினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேவேளை, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பங்காளிக்கட்சிகளின் செயற்பாடு குறித்து மொட்டு கட்சி அதிருப்தியை வெளியிட்டது.

Web Design by Srilanka Muslims Web Team