அமைச்சர்களின் ரவுசர்களை தலையூடகக் கழற்றுவோம் - BBS - Sri Lanka Muslim

அமைச்சர்களின் ரவுசர்களை தலையூடகக் கழற்றுவோம் – BBS

Contributors

-அபூஹக்-

“அருகில் இருக்கும் நாம் கேகாலை, மாவனெல்லைக்கு வருவோம். அங்கு அதாவுத செனிவிரத்ன, லலித் திஸாநாயக்க மற்றும் இன்னும் பலரின் காற்சட்டைகளை தலையூடகக் கழற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான கோமாளிகளை நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது” என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்தக் கருத்தினை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பௌத்தர் ஒருவரினால் அல்லது தேரரொருவரின் பெயரினால் தொல்பொருள்சார்ந்த இடத்தில் கட்டுமானங்களை நிர்மாணித்தால் அதனை பொலீஸார் வந்து அதனை அகற்றிச் செல்கின்றனர். சிங்கள பௌத்தர்களுக்கு நீதி ஒரு விதமாகவும் முஸ்லீம்களுக்கு இன்னொரு விதமாகவும் நீதி செற்படுவது எப்படி? இது சுத்துமாத்து, சோகை பீடித்த அரசாங்கமாகும்.

“அருகில் இருக்கும் நாம் கேகாலை, மாவனெல்லைக்கு வருவோம். அங்கு அதாவுத செனிவிரத்ன, லலித் திஸாநாயக்க மற்றும் இன்னும் பலரின் காற்சட்டைகளை தலையூடகக் கழற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான கோமாளிகளை நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்பக்கூடாது.

உருகொடவத்த சுங்கப் பொருட்பிரிப்பு மத்திய நிலையத்தில் மார்ச் மாதம்கைப்பற்றப்பட்ட 262 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் தற்போது நுறு அளவிலான கிலோ நிறைக்கு குறைவடைந்துள்ளது மீதியானதற்கு என்ன நடந்தது” என ஞானசார தேரர் கேள்வி எழுப்பினார். போதைப் பொருளின் தாக்கம் பாடசாலை கட்டமைப்புவரை வியாபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team