அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் இன்னொரு அலை ஆபத்து – ரவிகுமுதேஸ்..! - Sri Lanka Muslim

அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் இன்னொரு அலை ஆபத்து – ரவிகுமுதேஸ்..!

Contributors

சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக அடுத்த மூன்றுமாதங்களில் மீண்டும் ஒரு அலை உருவாகலாம் என சுகாதாரதொழிற்துறையினரின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருமளவு சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம் என சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையால் அடுத்த மூன்று மாதங்களில் இன்னுமொரு அலை உருவாகும் ஆபத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் பலன் ஆறுமாதங்களிற்கு மாத்திரம் நீடிக்கும் என ரஸ்ய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவைரசின் ஒவ்வொரு வகையும் தடுப்பூசிக்கு ஒவ்வொரு வகையான விளைவுகளை வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களால் ஏனையவர்களிற்கு நோய் தொற்றுவதை தடுக்க முடியாது என்பது நன்கறியப்பட்ட விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team