அமைச்சர் அடித்தாரோ ஆயிரம் கோடிகளில்: தாய் நாட்டுக்கு ஒரு தாலாட்டு » Sri Lanka Muslim

அமைச்சர் அடித்தாரோ ஆயிரம் கோடிகளில்: தாய் நாட்டுக்கு ஒரு தாலாட்டு

flag6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


ஆராரோ ஆரிவரோ
அன்பான தாய் நாடே
ஆரடித்து நீ நலிந்தாய்
அடித்தாரை சொல்லி விடு
ஆனாலும் பயனில்லை.

அமைச்சர் அடித்தாரோ
ஆயிரம் கோடிகளில்
ஆளுனர் அடித்தாரோ
ஊழல் நிறுவனத்தால்

உறுப்பினர் அடித்தாரோ
கறுப்புப் பணத்தாலே
குரூப்பாய் அடித்தாரோ
கொந்தராத்து செய்பவர்கள்

உரிமைக்காய் என்று சொல்லி
உதிரத்தை ஓட்டியவர்
அருமைத் தாய் நாடு
ஆடிப் போக அடித்தாரோ

அரசியலில் வாக்குப் பெற
அடுத்த மொழியை தாழ்த்தி விட்ட
ஒரு சில தலைவர்கள்
உருக்குலைய அடித்தாரோ

வீணான செலவு செய்து
விண் வெளிக்கும் ஓடம் விட்ட
மானா ராவன்னாக்கள்
மாதா உன்னை அடித்தாரோ

வாயாலே வடை சுட்டு
வாழுகின்ற ஆட்சியாளர்
நோயிலே விழுந்த உனக்கு
நுளம்பு கூட அடிக்கலையே.

லஞ்சம் வாங்கும் அதிகாரி
லடுக்கிகளில் மயங்கியவர்
எஞ்சியிருக்கும் உன் உயிரும்
இழந்து போக அடித்தாரோ

பொறுக்கிகள் கோஷ்டிகள்
போதை கடத்துவோர்கள்
நொறுக்கி அடித்தாரோ
நொந்து போக தாய் நாடே.

சீனா அடித்தானோ
சின்ன மீன் போட்டு இங்கு
சீனி போட்டு பேசியிங்கு
சி ஐ ஏ அடித்தானோ

எலோரும் அடித்த அடி
இந்தத் தாய் விழுகின்றாள்
நல்லபடி ஆண்டிருந்தால்
நம்ம் ஊரு சிங்கப்பூரு

கடவுள்தான் இந்நாட்டை
காப்பாற்ற வேண்டும்
தடையில்லா முன்னேற்றம்
தந்தருள வேண்டும்

Web Design by The Design Lanka