அமைச்சர் அதாஉல்லாவுக்கு பொத்துவில் கல்விமான்கள் நன்றி தெரிவிப்பு - Sri Lanka Muslim

அமைச்சர் அதாஉல்லாவுக்கு பொத்துவில் கல்விமான்கள் நன்றி தெரிவிப்பு

Contributors
author image

சலீம் றமீஸ்

பொத்துவில் மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கு புனர்நிரமாண வேலைகள் ஆரம்பிக்கும் நிகழ்வும். பாடசாலைகளுக்கான பேன்ட் உபகரணங்கள், சீருடைகள், விளையாட்டுக்கழகங்களுக்கான உபகரணங்கள், சீருடைகள், மதஸ்தலங்களுக்கான மற்றும் பொது அமைப்புக்களுக்கு உபகரணங்கள், உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

 

மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள், அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும். பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.பதுர்கான் தலைமையில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களின் முயற்சியினால் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொத்துவில் பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கு தேவையான வீதி அபிவிருத்திகள் நீர்ப்பாசன திட்டங்கள், பாலம் அமைத்தல், விவசாய பாதைகள் அமைத்தல், குளங்கள் நிர்மானம் போன்ற அபிவிருத்தி பணிகள் இடம் பெற்று வரும் இவ்வேளையில்  பாடசாலைகள், மதஸ்தலங்கள், விளையாட்டு கழகங்கல், சமூக அமைப்புக்கள், முதியோர் அமைப்பு , முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் போன்றவற்றிற்கு அபிவிருத்தி திட்டங்கள், உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகளையும் செய்து வருவது இந்த நாடே அறிந்த விடயமாகும்.

இந்த அபிவிருத்திகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்களுக்கு பொத்துவில் பிரதேசத்தில் வாழும் விவசாயிகள், கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், பொது அமைப்புக்களினது பிரதி நிதிகளும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

 

இந்த நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், கிழக்கு மாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாஹூதீன்,

 

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எந்திரி.வி.கருணநாதன் , நீர்ப்பாசன மாகாணப் பணிப்பாளர் எந்திரி. எஸ்.திலகராஜா, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாண பணிப்பாளர் எந்திரி.ஏ.எல்.எம்.நிசார், மாகாண பிரதி நீர்ப்பாசணப் பணிப்பாளர் எந்திரி. யு.எல்.எம்.நஸார், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை பிரதம பொறியியலாளர் எந்திரி எஸ்.மஹிந்தன், மத்திய நீர்ப்பாசன அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எந்திரி கே.டி. நிஹால் சிறிவர்த்தன, வீதி அபிவிருத்தி அதிகார சபை அக்கரைப்பற்று பிரதம பொறியியலாளர் எந்திரி.ஐ.எல்.ஏ.பாரி, அம்பாரை பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸாரத்

 

, பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர்(மாகாணம்) பி.ரி.ஏ.ஜெயகுமார், நீர்;ப்பாசன பொறியியலாளர்(மத்திய) டபிள்யு.யு.கே.சிரிவர்த்தன, கோமாரி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் சிறிசாந்த, அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரனி எம்.எம்.பஹிஜ், எஸ்.எம்.சபீஸ், யு.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ,றாசீக் உட்பட மத்திய, மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

 

04

 

05

 

06

 

07 08

Web Design by Srilanka Muslims Web Team