அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையில் நவீன சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபம் - Sri Lanka Muslim

அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையில் நவீன சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபம்

Contributors

 

-ஜே.எம்.வஸீர் 

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வருமானம் குறைந்தஉள்ளுராட்சிசபைகளை இனங்கண்டுஅவற்றிற்கு தேவையானஉட்கட்டமைப்புவசதிகளைஅபிவிருத்திசெய்யும் செயற்திட்டத்தின் கீழ் காலி நியாகம பிரதேசசபைக்குட்பட்ட பிட்டிகல நவீன சந்தைத் தொகுதிக்கானஅடிக்கல் நடும் நிகழ்வுஉள்ளுராட்சிமற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதற்காகஉள்ளுராட்சிமற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் 13 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நிரந்தர சந்தைக் கட்டிடம் இன்மையால் பிரதேசவாசிகள் பல ஆண்டுகள் தாம் உற்பத்திசெய்யும் வியாபாரப் பொருட்களை விற்பனை செய்வதில் பல இன்னல்களை எதிர் நோக்கியமை குறிப்பிடத்தக்கது. இந்தசந்தைக் கட்டிடத் தொகுதிஅமைக்கப்படுவதன் மூலம் பிரதேசவாசிகளின் மிகநீண்டகாலத் தேவைநிவர்த்திசெய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் பிரதமஅதிதியாககலந்துகொண்டுஉரையாற்றியஅமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா…

மக்களுக்காகமக்களின் காலடியில் நெருங்கிசேவையாற்றக்கூடியஒரேநிறுவனம் என்றால் அதுஉள்ளுராட்சிநிறுவனமாகும். அதற்கமையவேநமது ஜனாதிபதிஅவர்கள் நாட்டிலுள்ளஉள்ளுராட்சிசபைகளைஅபிவிருத்திசெய்யவழிகாட்டுகின்றார். அதன் பிரகாரம் எனதுஅமைச்சுநாட்டிலுள்ளஅனைத்துஉள்ளுராட்சிசபைகளினதும் தேவைகளை இனங்கண்டுஅவைகளைநிவர்த்திசெய்யும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றதுஎனஅமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் பியசேனகமகே,எல்பிட்டியசுதந்திரகட்சியின் அமைப்பாளர் கீதாகுமாரசிங்க,நியாகமபிரதேசசபையின் தலைவர் பிரசாத் வீரக்கொடிமற்றும் அரசியல் பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team