அமைச்சர் அதாவுல்லா மற்றும் முதல்வர் சக்கியின் புகைப்படத்தை அகற்றி கடிகாரத்தை பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள் - Sri Lanka Muslim

அமைச்சர் அதாவுல்லா மற்றும் முதல்வர் சக்கியின் புகைப்படத்தை அகற்றி கடிகாரத்தை பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள்

Contributors

அக்கரைப்பற்று நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் மாநகரசபை மேயர் அதாவுல்லா சக்கியின் நிழல்படம்  வைக்கப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
அக்கரைப்பற்று நகர் மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூடு அமைந்திருந்த பகுதியில் மணிக்கூட்டுக்கு பதிலாக மாநகரசபை மேயர் அதாவுல்லா சக்கியின் நிழல்படம் வைக்கப்பட்டுள்ளது.

 

இதனால் பொதுமக்கள் நேரத்தை பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்படுகின்றனர்.

 

அந்த நிழல் படத்தை அகற்றிவிட்டு மணிக்கூட்டை மீண்டும் பொருத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 
மணிக்கூட்டு கோபுரம் பொதுமக்கள் நேரம் பார்க்க அமைக்கப்பட்ட பொதுக்கட்டிடம் ஆகும். இருந்தபோதும் இவ் மணிக்கூட்டு கோபுரத்தை புனர்நிர்மாணித்து மணிக்கூட்டை இயங்கவைத்து பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாவர்.

 

எனினும் குறித்த மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 

அக்கரைப்பற்று பிரதேச சபையாக காணப்பட்ட போது தவிசாளராக செயற்பட்ட ஏ.எல்.எம் தவத்தின் காலப்பிரிவில் ஏ.எல்.எம் . தவத்தின் அனுசரனையோடு தொங்கவிடப்பட்ட இப் பதாதைகள் இன்னும் அகற்றப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இம் மணிக்கூட்டு கோபுரத்தின் உச்சியில் ஒரு சிறிய அரச மரம் இருப்பதால் அதனை புணர் நிர்மானம் செய்து புதிய மணிக்கூட்டை பொருத்த அதிகாரிகள் அச்சம் கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

 
Akkarai akkarai-21

Web Design by Srilanka Muslims Web Team