அமைச்சர் உதய கம்மன்பில ஒரு முட்டாள் - கடுமையாக திட்டிய சரத் பொன்சேகா..! - Sri Lanka Muslim

அமைச்சர் உதய கம்மன்பில ஒரு முட்டாள் – கடுமையாக திட்டிய சரத் பொன்சேகா..!

Contributors

அமைச்சர் உதய கம்மன்பில ஒரு முட்டாள், தனது வேட்பு மனுவில் கையெழுத்திட்ட நபரை தனக்கு தெரியாது என கூறும் முட்டாள் என்று ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வசைபாடியுள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்தால் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கட்சிக்குள்ளேயே பல எதிர்ப்புகள் உருவாகி இருந்தன.

இந்த நிலையில், தன்னிலை தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கம்மன்பில ஏற்பாடு செய்திருந்தார். அதில் சாகர காரியவசம் என்ற நபரை தனக்கு தெரியாது என்றும், அண்மை நாட்களில் நடந்த சம்பவத்திற்கு முன் ஒருபோதும் அவரை தெரியாது என்றும், அத்தகைய நபரை இதற்கு முன் அறிந்ததில்லை என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா உதய கம்மன்பிலவை முட்டாள் என்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் கம்மன்பிலவின் நியமனப் பட்டியலில் சாகர காரியவசமே கையெழுத்திட்டார்.

தனது வேட்புமனுவில் கையெழுத்திட்ட நபரைக்கூட அமைச்சர் கம்மன்பில தெரியாது என்று கூறியதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

மேலும், கம்மன்பில மற்றும் காரியவசம் இரண்டு குழுக்கள் அல்ல, பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு குழு என்றும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team