அமைச்சர் கம்மன்பிலவின் இறுதி நாளா..? காட்போட் வீரர்கள்கூட அமைச்சர்களாகலாம் - ஹேசான் Mp..! - Sri Lanka Muslim

அமைச்சர் கம்மன்பிலவின் இறுதி நாளா..? காட்போட் வீரர்கள்கூட அமைச்சர்களாகலாம் – ஹேசான் Mp..!

Contributors
author image

Editorial Team

பாராளுமன்றத்தில், தற்போது வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுக்கின்றன.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில், குறுக்கு கேள்வியொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியான ஹேசான் வித்தானகே,

இந்த அமைச்சின் அமைச்சராக இருக்கும் இறுதி நாளாகக்கூட உங்களுக்கு இருக்கலாம், ஏனெனில், இந்த அரசாங்கத்தில் இருக்கும் காட்போட் வீரர்கள், அமைச்சர்களாகலாம் என விளித்து கூறிவிட்டு கேள்வியை எழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில, “பிரச்சினைகளிலிருந்து தப்பியோடியவன் நானல்ல, எனது அரசியல் வாழ்க்கையில் அவ்வாறு இடம்பெறவில்லை” என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team