அமைச்சர் கருணாவின் வீர விளையாட்டு! - Sri Lanka Muslim
Contributors

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, அவற்றின் செயற்பாடுகளை வினைத் திறன் மிக்கவையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் காலப் பகுதியில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக வடக்கு, கிழக்கில் பல சிறப்பு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர் தெரிவித்தார்.

முண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழங்களுக்கு உடற்பயிற்சி பொருட்களை இவர் வழங்கி வைத்தார்.

இவரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சுமார் 200,000 ரூபாய் பெறுமதியான உடற்பயிற்சி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். இரவீந்திரன், பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம், மீள்குடியேற்ற அதிகார சபையின் பணிப்பாளர் சத்தியவரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(J.N)P1170469P1170472P1170473P1170476

 

Web Design by Srilanka Muslims Web Team