அமைச்சர் நாமலின் எண்ணக்கரு : கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் !! - Sri Lanka Muslim

அமைச்சர் நாமலின் எண்ணக்கரு : கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் !!

Contributors

நூருல் ஹுதா உமர்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இச் செயற்திட்டம் அட்டாளைச்சேனை இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ஏ.எல்.முஹம்மட் சீத் தலைமையில் அட்டாளைச்சேனை பீச் கட் முன்பாகவுள்ள கடற்கரை சுத்தம் செய்தலும் மரநடுகையும் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை இளைஞர் சேவைகள் உத்தியோத்தர் பீ. எம்.றியாத் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் சரத் வீரசேகரின் இணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான றிஸாட் ஏ காதர் , டப்லியூ. டீ வீரசிங்கவின் இணைப்பாளரும் ஆசிரியருமான ஜெஸீல் , முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.றனீஸ் , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர் சர்பான் , இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சீத் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Web Design by Srilanka Muslims Web Team