அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரது மனைவியை அச்சுறுத்தவில்லை - பொலிஸ் - Sri Lanka Muslim

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரது மனைவியை அச்சுறுத்தவில்லை – பொலிஸ்

Contributors

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது அவரது மனைவி அஷா அளுத்கமகே சுமத்திய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது அவரது மனைவி அஷா அளுத்கமகே 2013-11-21ம் திகதி அன்று பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

தனக்கு தனது கணவரான அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பொலிஸ் தலைமையக விசேட பிரிவினர் விசாரணை நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவோ அல்லது அவரது கட்டளையின் பெயரில் வேறு குழுவினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொலைபேசியிலோ அல்லது வேறு விதத்திலோ அஷா அளுத்கமகேவிற்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவியான ஆஷா அளுத்கமகே பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்தார்.

அமைச்சர் மஹிந்தானந்தாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை தான் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தே, கணவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுப்பதாக அமைச்சரின் மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கணவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பளிக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ள ஆஷா அளுத்கமகே தனது கணவருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கும் அவரது மனைவி ஆஷா அளுத்கமகேவிற்கும் இடையில் விவாகரத்து வழக்கு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

(அத தெரண – தமிழ்)

Web Design by Srilanka Muslims Web Team