அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரிற்கு எதிராக முறைப்பாடுகள் - Sri Lanka Muslim

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரிற்கு எதிராக முறைப்பாடுகள்

Contributors

நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளராக செயற்படும் ரஹ்மத் மன்சூரிற்கு எதிராக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இந்த முறைப்பாகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் அக்கட்சியின் நற்பட்டிமுனை மத்திய குழுவினால் முன்வைக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பட்டிமுனை மத்திய குழுவிற்கும் அக்கட்சியின்  தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கட்சி தலைமயகமான தாருஸ்ஸலாமில் நேற்று இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பில் கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் கலந்துகொண்டார். இதன்போதே நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரான ரஹ்மத் மன்சூரிற்கு எதிராக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

 

கட்சியின் நற்பட்டிமுனை மத்திய குழுவினை புறக்கணித்துவிட்டு குறித்த கிராமத்தில் பல செயற்திட்டங்களை மேற்கொள்வதாகவும், நீதி அமைச்சினால் வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்களில் கட்சியின் போராளிகள் ரஹ்மத் மன்சூரினால் புறக்கணிக்கப்படுவதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

 

அத்துடன் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை கணக்கிலெடுக்காது மாற்றுக் கட்சி உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர்கள் கட்சி தலைவரிடம் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னரும் சிலர் முறையிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பட்டிமுனை மத்திய குழுவிற்கு உறுதியளித்தார்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரான ரஹ்மத் மன்சூர், முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். (நன்றி விடியல்)

Web Design by Srilanka Muslims Web Team