அமைச்சர் ரிசாட் பதியுதீனின் 41 வது பிறந்த தினம் நாளை - Sri Lanka Muslim

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் 41 வது பிறந்த தினம் நாளை

Contributors

-தகவல்-அபூ அஸ்ஜத்-

41 வது வயதில்தடம்பதிக்கும்அமைச்சர்றிசாத்பதியுதீன் வாழுகின்ற போது தான் சமூகத்திற்கு என்ன செய்தான் என்பதை நம் மூத்தோர்களும்இபுத்தி ஜீவிகளும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாகும்.இந்த வார்த்தைகளை உண்மைப்படுத்த முயற்சிக்கும் போது எத்தனையோ இடர்களையும்இதடங்களையும்நாம் பார்க்கின்றோம்.

சிலர் இந்த தடைகளைக் கண்டு ஏன் நமக்கு இந்த வம்பு என்று எண்ணி மீண்டும் தமது சுலநல வாழ்வுக்குள் செல்கின்றனர்.இது மனிதனது பலவீனங்களில் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது.இருந்த போதும் சிலர் இந்த சவால்களை தமது வாழ்வின் இலட்சியங்களாக சுமந்து கொண்டு அதில் நீ்ண்ட துாரம் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.இந்த முயற்சி தான் வெற்றியின் இரகசியம் என்றும் கூறலாம்.இந்த மன தைரியம் என்பதானது கிடைத்த மாத்திரத்தில் ஏற்பட்டுவிடுவதில்லை.இதற்கு பல தியாகங்கள் செய்ய வேண்டும்.தியாகத்துடன் மட்டும் நின்றுவிடாதுஇஅதற்காக வேண்டி தமது நேரம்இகாலம் என்பவைகளையும் இழக்க வேண்டும்.

இவ்வாறு இழப்பவர்களில் புத்தி ஜீவிகள்இகல்வி மான்கள்இஅரசியல் தலைமைகள்இமத பெரியார்கள் இலக்கியவாதிகள் என்று பல தரப்பாரையும் பட்டியல் போட்டு கூறலாம். இந்த வரிசையில் தமது 41 வது வயதில் காலடித்து எடுத்து வைக்கும் இலங்கையில் குறுகிய காலத்தினுள் அரசியல் வரலாற்றில் இடம் பிடித்திருக்கினடறார்.தமது ஆரம்ப கல்வியினை பெரும் சவால்களுடன் சந்தித்தவராக பின்னர் அனைத்தையும் இழந்து அகதியாகி தாம் கற்ற கல்வியுடன் வெளியேறிய இன்று அதிதியாக மக்கள் மனங்களில் சேவையின் செம்மலாய் பொதிந்து நிற்பவர்.

அல்லலுறும் மக்களின் தேவைகளை தேடிச் சென்றும்இஅம்மக்களது கண்ணீரை துடைக்கும் வகையில் பெரும் பணிகளை ஆற்றியவர்.இந்த தேசத்தல் அகதிகள் என்ற சமூகமொன்று இருக்கக் கூடாது என்ற வேட்கையுடன்இஅரசிலுக்கு இழுத்து எடுக்கப்பட்டவர்.பொறியியலாளராய் பணியாற்றி நாட்டின் அபிவிருத்திக்கும் மக்களின் பயணத்திற்கும் பங்களிப்பினை நல்கியவர். இன்று புடம் போட்டு காட்டும் அரசியல் வாதிகளின் பட்டியலில் இளையவராய் சிறியவராய் ஆனால் உரிமைக்காக எவருடனும் மோதும் திறமையானவராய் எதிராளிகளுக்கு சத்தியத்தை

சொல்பவராய் இருந்துவருகின்றார்.

குறிப்பாக இலங்கையில் சிறுபான்மைகள் என்று எங்கு மக்கள் வாழ்கின்றார்களோஇஅங்கு இம்மக்கள் எவ்வினத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்காக துணிந்து பேசும் ஒருவராய் இவர் இன்று இலங்கையின் அரசியல் துறையில் பேசப்பட்டுவருபவர்.அரசியலை மக்களுக்காக செய்யும் இவரது நேர்மைத் தன்மைக்கு பல விருதுகளை தட்டிக்கொண்டவர்.கற்பவர்களுக்காக பல்வேறு உதவிகளையும்இஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுப்பவர்.இனம் மதம் மொழி பிரதேசம் கடந்து அனைவருக்கும்

தேவையுணரந்து பணியாற்றிவருபவர் 13 அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை சுமந்து சிறப்பாக பணியாற்றியவர்.ஜோர்தானை தலைமையக மாகக் கொண்ட சர்வதேச இஸ்லாமிய ஆய்வு மையத்தின் உலக முஸ்லிம் தலைவர்களின் ஆளுமை தொடர்பிலான தரப்படுத்தலில் தெரிவு செய்யப்பட்டு இலங்கைக்கும் எமது நாட்டின் முஸ்லிகளுக்கும் முன்மாதிரியானவராக அடையாளப்படுத்தப்பட்டமையினையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

மன்னார் மாவட்டத்தின் தாராபுரம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டு மன்னார் அல்-மினா எருக்கலம்பிட்டி பாடசாலைகளில் ஆரம்ப கல்வியினை கற்றுஇகொழும்பு சாஹிராவின் பழைய மாணவராகி மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று இன்று இலங்கையில் வாழும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அகில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று மக்கள் பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதயுதீன் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.

அவர் சேவைகள் தொடர என்றும் இறைவனின் ஆசியும்இபாதுகாப்பும்இருக்க இன்றைய நாளில் நாமும் பிரார்த்திப்போம்.

 

( 1972-11-27 ஆம் திகதி பிறந்தார்-அமைச்சர் றிசாத்)

Web Design by Srilanka Muslims Web Team