அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு அடுத்த மாதம் டாக்கா பயணம் » Sri Lanka Muslim

அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு அடுத்த மாதம் டாக்கா பயணம்

r

Contributors
author image

ஊடகப்பிரிவு

இலங்கை பங்களாதேஷூ ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு ஒன்று அடுத்த மாதம் டாக்கா பயணமாகின்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் 2010ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு முடிவில் மும்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் இது ஒரு பிரமாண்டமான வளர்ச்சி என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இலங்கைக்கான பங்களாதேஷூ தூதுவர் ரியாஷ் ஹமிதுல்லா சந்தித்து பேச்சு நடத்தியப்போதே அமைச்சர் இத்தகவலை தெரிவித்தார்.

‘கடந்த ஐந்து வருடங்களாக பங்களாதேஷூக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது மேலும் இரண்டு நாடுகளும் வர்த்தக வாய்ப்புக்களை பெருக்கிக்கொள்ள வேண்டும். பலம் வாய்ந்த வர்த்தகம் மற்றும் வியாபார துதூக் குழு ஒன்றை பங்களாதேஷூக்கு அடுத்த மாதம் அனுப்பிவைப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு எனது அமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பங்களாதேஷூவுடனான வர்த்தக மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை இலங்கை எதிர்பார்த்து நிற்கின்றது’ இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இலங்கையின் வர்த்தக துதூக்குழுவை பங்களாதேஷூ வரவேற்பதாக அந்நாட்டின் துதூவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

‘2010ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 48மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2016ம் ஆண்டு மும்மடங்காக அதாவது, 142மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது’ என்று வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பங்களாதேஷூக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக பருத்தி, பிளாஸ்டிக், துணிவகைகள், சவர்க்காரம், மசகுப் பொருட்கள் மற்றும் தூய்மைப்படுத்தும் திரவங்கள் என்பவற்றை குறிப்பிடமுடியும். ஏன குறிப்பிட்ட வர்த்தக திணைக்களத்தின் அதிகாரி பங்களாதேஷூல் இருந்து மருத்துவப் பொருட்கள், கடதாசி, உருக்கு போன்றப் பொருட்களை இலங்கை இறக்குமதி செய்வதாக குறிப்பிட்டார். பங்களாதேஷூல் 45இலங்கை கம்பனிகள் 300மில்லியன் அமெரிக்கன் டொலர் வகையிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

r r.jpg2

Web Design by The Design Lanka