அமைச்சர் றிசாட் மீது பொதுபலசேனா குற்றச்சாட்டு - Sri Lanka Muslim

அமைச்சர் றிசாட் மீது பொதுபலசேனா குற்றச்சாட்டு

Contributors

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக அமைச்சர் றிசாட்டை மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறது பொதுபலசேனா.

 

அமைச்சர் றிசாட் பதியுதீன், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரம் ஏக்கர் காணிப் பரப்பை கையகப்படுத்தி இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பொதுபல சேனாவின் பேச்சாளர் சமில லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற நில அபகரிப்புகள் தொடர்பில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கவனத்தில் எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.(நன்றி டெய்லி சிலோன்)

Web Design by Srilanka Muslims Web Team