அமைச்சர் றிசாத்தை அழிக்க ஒரு கூட்டம் சதி » Sri Lanka Muslim

அமைச்சர் றிசாத்தை அழிக்க ஒரு கூட்டம் சதி

rr.jpeg2

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சைபுதீன் எம் முஹம்மட்


நமது சமூகத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் அமைச்சர் றிசாத்தை அழிக்க வேண்டும் என்று பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒரு கூட்டம் நியமிக்கப்பட்டு முகநூல், சமூக வலையமைப்பு ஊடாக இல்லாத பொல்லாத பொய்ப் பிரச்சாரங்களை பெரும்பான்மை இனத்தவர்களிடம் அவர்களின் மொழியினூடாக கொண்டு சேர்க்கின்றார்கள்.

அவர்களும் இதுதான் உண்மையென நம்பி முஸ்லிம் சமூகத்தை றிசாட் பதியுத்தீன்தான் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்கின்றான் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவ்விடம் செல்லும் ஒரே அரசியல்வாதி றிசாதாகத்தான் இருக்கும் என்று பெளத்த மக்களுக்கு இனவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே அமைச்சர் றிசாட் பதியுத்தீன் புதிதாக ஒரு அபிவிருத்தி பணியை முஸ்லிம் சமூகத்திற்கு செய்தார் என்றால் அதை தவறான முறையில் பதிவிறக்கம் செய்து காட்டுகிறார்கள். உதாரணமாக கடந்த கிழமை பொத்துவில் நகரில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வினை எவ்வாறு சித்தரித்து காட்டியிருக்கின்றார்கள் என்று பார்த்தால் விளங்கும் நமது சமூகத்தை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்று.

இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை நம் நாட்டுக்கு கொண்டு வருவதென்றால் இலகுவான விடயமல்ல. எத்தனை துன்பங்களுக்கு மத்தியில் அரபு தனவந்தர்களிடம் கெஞ்சி மன்றாடி ஏழை முஸ்லிம்களுக்கு கொண்டு சேர்க்கின்றார்.

இதை அறியாமல் நமது சமூகத்தை சார்ந்த அரசியல்வாதிகளும் வங்குரோத்து அரசியல் இலாபங்களுக்காக நமது சமூகத்தைக் காட்டிக் கொடுகின்றார்கள்

எவனாக இருந்தாலும் சமூகத்திற்காக யார் முன் நின்று செயற்படுகின்றாரோ அவரை இறைவன் கைவிட மாட்டான்.

அமைச்சர் றிசாத்தை இனவாதிகளின் சதித்திட்டங்களில் இருந்து பாதுகாப்பு பெற ஒட்டுமொத்த முஸ்லீம்களும் துஆ செய்து கொள்ளுங்கள்.

rr

Web Design by The Design Lanka