அமைச்சர் றிசாத்தை சிறையில் அடைக்க முயற்சி - அமைச்சர் அமீர் அலி » Sri Lanka Muslim

அமைச்சர் றிசாத்தை சிறையில் அடைக்க முயற்சி – அமைச்சர் அமீர் அலி

ameer

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

வில்பத்து காணியை மீட்க போராடும் அமைச்சர் றிசாட் பதியூதீனை தேசத்தில் இருக்கின்ற இன குரோதத்தை தூண்டுகின்ற சில அரசியல்வாதிகள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

திருகோணமலை மூதூர் பிரதேச சபையில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை  ஆதரித்து நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் மூதூர் நொக்ஸ் வீதி சந்தியில் நேற்று (08) இரவு இடம் பெற்ற போதே அவர் மேற் கூறியவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

வில்பத்து பகுதியில் இருந்து அகதியாக சென்ற மக்களுக்கு வில்பத்து காணியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தில் எனது உயிர் போனாலும் பரவாயில்லை காணியை பெற்றுக் கொடுப்பேன் என்கிறார் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியூதீன்.

ஆனால் தேசத்தில் இருக்கின்ற இன குரோதத்தை தூண்டுகின்ற மதவாத்தை தூண்டுகின்ற சில அரசியல்வாதிகள் றிசாட் பதியூதினை தண்டிக்க வேண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.
இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் என்பதற்காக போராடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைக்கு நீங்கள் இந்த சந்தர்பத்தை தாருங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமை மற்றும் அதன் அங்கத்தவர்களும் சமூக பொறுப்போடும் இஸ்லாமிய சிந்தனையோடும் அரசியலை செய்து வருகின்றார்கள்.

எங்களால் அறிமுகப்படுத்தியுள்ள வேட்பாளர்கள் மிகவும் பெறுமதியானவர்கள் இவர்களை விட தெரிவு உங்களுக்கு வேரொன்றும் கிடையாது வெறுமனே வெற்றி பெற்று அவர்களது உழைப்புக்காக கொண்டுவரவில்லை. உங்களின் பிரச்சனைகளை தீர்த்து தருவதற்கே கொண்டு வந்துள்ளோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும் அவர் வட்டார முறைத் தேர்தல் பிழையான தேர்தல் முறை என்றும் அறிமுகப்படுத்திய தேர்தல் முறை பிழையானது என்றும் இதை அறிமுகப்படுத்தியவர்கள் பிற்காலத்தில் யோசிப்பார்கள் என்று நாங்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூறியிருந்தோம். ஆனால் அவர்கள் பிழையான தேர்தல் முறை என்று இப்போதே யோசிக்க தொடங்கி விட்டார்கள் என்றார்.

Web Design by The Design Lanka