அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் - Sri Lanka Muslim

அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள்

Contributors

-அபூ அஸ்ஜத் –

வடக்கிலிருந்து முஸ்லிம்களை துரத்திய போதும் அதன் பின்னர் சமாதானத்தினையடுத்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று பல்தரப்பில் முன் வைக்கப்ட்ட கோறிக்கைகள் செல்லாக்காசாகவும் இனவாதிகளின் தடங்கள்களுக்கு மத்தியிலும் இம்மக்களது நலன் குறித்து செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது காழ்புணர்வு கொண்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இனத்துவத்துக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை கிளை தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில செய்திதாள் ஒன்று அதன் முதன் பக்கத்தில் பிரதான செய்தியாக இலங்கையின் வடக்கில் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றல் தொடர்பில்இஅம்மக்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றினை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபிடம் இலங்கையின் அமைச்சர் றிசாத் பதியுதீன் கோறியிருப்பது தொடர்பில் தெரிவிக்கப்படும் குறிச்சாட்டு தொடர்பில் இனத்துவத்துவத்துக்கான சர்வதேச அமைப்பு விளக்கமொன்றை அளித்துள்ளது.

 
இலங்கையின் பிரதமரின் அலுவலகத்தினை அமைச்சர் றிசாத் பதியுதீன் பயன்படுத்தி இந்தக்கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
அமைச்சர் றிசாத் பதியுதீன் வடக்கில் மன்னாரை பிறப்பிடமாகக் கொண்டனர்.அதே வேளை 1990 ஆம் ஆண்டுகளின் கடைசிப்பகுதியில் அவரும் அவரது மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்ட ஒருவர்.அது போல் 25 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களும் இங்கிருந்து துடைத்தெறியப்பட்டனர்.
அவர்கள் புத்தளம் உள்ளிட்ட நாட்டின் பல பாகாங்களி்ல் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர்.கடந்த 22 வருடங்களாக இன்னும் அவர்கள் தமது மண்ணில் முழுமையான மீள்குடியேற்றத்தை சந்திக்காத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 

 

அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போதுஇஇறுதி கட்ட அரசாங்கத்தின் போர் நகர்வில் முள்ளி வாய்க்காய்க்காலில் இருந்து தமிழ் மக்கள் வவுனியாவுக்கு வந்த போதுஇஅவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதில் முழு மூச்சாக இருந்து செயறற்பட்டதுன் தமது அமைச்சு காலப்பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்தும் காட்டினார்.துரதிஷ்டம் தன் சமூகம் பற்றி எப்போதும்இபேசும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அப்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் நலனிலேயே அக்கறை கொண்டு செயற்பட்டார்.

 
அதன் பிற்பாடு முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முற்பட்ட போதுஇஅரச சார்பற்ற நிறுவனங்கள் தமது உதவிகளை நிறுத்திக் கொண்டன அகதிகளுக்கான பேரவை தமிழ் மக்களுக்கு வழங்கிய உதவிகளில் 1 சதவீதத்தையேனும் முஸ்லிம்களுக்கு வழங்காமல்இகால இடம் பெயர்ந்த மக்களை கால நிர்ணயத்தை கொண்டு பழையஇபுதிய அகதிகள் என பிளவுகளை ஏற்படுத்தின.

 

குறிப்பாக வன்னியிலிருந்தே பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.அதனாலேயே தமது தேர்தல் மாவட்டத்தில் தமக்கு மக்கள் அளித்த வாக்குகளை கொண்டு அம்மக்களது விமோசனத்திற்காக பணியாற்றிவரும் அமைச்சர் மீது சில ஊடகங்களும் இன உறவை சீர்குலைக்கும் விஷமிகளும் இவ்வாறு கதைகளை உருவாக்கி அதனை மக்கள் மத்தியில் விற்பனை செய்து தமது பத்திரிகை மற்றும் இனவாத சிந்தனைகளுக்கு தீணி போட்டு கொண்டிருக்கின்றனர்.

 
யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் கழிந்த நிலையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு வடக்கு முஸ்லிம்களை மீ்ள்குடியேற்றம் செய்ய முடியாத நிலையு காணப்படுகின்றது.இந்த நிலையில் தான் வகிக்கும் பதவிகளை கொண்டு சர்வதேச சமூகத்தின் உதவியினை கோறுவது ஒரு நாட்டின் சட்ட வரையறைக்கு புறம்பான செயல் என கருதுவோமெனில் அது அமைச்சர் றிசாத் பதியுதீன் பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தினை மட்டும் மையப்படுத்துவோமெனில் இந்த நாட்டில் வாழும் இன்னும் எத்தனையோ அரசியல் வாதிகள் சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நிதி மற்றும் உதவிகளை எந்த வரிசையில் உள்ளீர்ப்பது என்பது அறியப்பட வேண்டியுள்ளது.

 
குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் கடந்த சில காலங்களாக பேசப்படும் விடயங்களே அவரது ஒவ்வொரு செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் சக்திகளின் வேளையாகவுள்ளது.வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்ய முனையும் போது அதனை ஒரு இனவாதமாக பார்த்து அதற்கெதிராக இடம் பெறும் தடைகள் செய்யாதவற்றை செய்ததாக செல்வாக்கினை பயன்படுத்தி பிழையான பிரசாரங்களை செய்யும் அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பில் ஆவேஷத்துடனும் உணர்வடனும் செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக பேசும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் இவ்வாறான வரிசையில் இந்த விடயமும் பார்க்க்கப்பட வேண்டும்.

 
இலங்கையில் இடம் பெயர்ந்தவர்கள் இல்லையென்று அரசாங்கம் கூறுவதாக அறிக்கைகளை விடுபவர்கள்இவடக்கிலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட நிலையில் மீள குடியேற வசதியின்றி பரிதவிக்கும் இந்த மக்களுக்கு வெளிநாட்டு அமைச்சு எத்தனை திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

 
இந்த விடயங்கள் தொடர்பில் எமது இனத்துவத்துக்கான சர்வதேச அமைப்பு சகல முஸ்லிம் துாதுவர்களையும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தி இம்மக்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான முனைப்புக்களை செய்யவுள்ளது.

 mannar1
mannar2

Web Design by Srilanka Muslims Web Team