அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது. - Sri Lanka Muslim

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான பலசேனவின் சோடிக்கப்பட்ட பொய்கள் ஒரு போதும் உண்மையாகாது.

Contributors
author image

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)

வடபுல முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன.உலக சரித்திரத்தில் கால் நூற்றாண்டு அகதிவாழ்வு(அவலவாழ்வு)வாழ்ந்தோர் என்ற பெயர் இவர்களின் தலையில் எழுதப்படவுள்ளது.மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் வடபுலமண்ணில் முஸ்லிம்கள் மீளக்குடியேறக்கூடிய  வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால் ஒரு 30 வீதமக்களே இதனைச்சரியாகப் பயன்படுத்தி மீளக்குடியேறியுள்ளனர்.ஏனைய மக்கள் சரியான முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடி வருகின்றனர்.அதற்கான காரணங்களாவன,,போதிய காணிகள் இன்மை,அழிக்கப்பட்ட வீடுகள் இன்னும் மீளக்கட்டிக்கொடுக்கப்படாமை.நட்டஈடுகள் வழங்கப்படாமை,

 

பலவந்த வெளியேற்றத்தால் ஏற்பட்ட 23 வருட தமிழ் முஸ்லிம் உறவிடைவெளி தற்போது மெல்ல குறைவடைந்து வருகின்றது.இதற்கு தமிழ் முஸ்லிம் சமயத்தலைவர்கள்,அரசியல் வாதிகள்,புத்திஜீவிகள் போன்றோர் பெரிதும் பாடுபட்டு உழைத்து வருகின்றனர்.அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் வடபுல முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தையும் தமது அரசியல் காலத்தில எப்பாடுபட்டாவது,மீளக்குடியேற்றிவிட வேண்டுமென அரும்பாடுபட்டு வருகின்றார்.இவரின் இப்புனிதசெயற்பாடு சில இனவாதக்குழுக்களின் பார்வையில் பிழையான புரிதல்களைக்கொடுத்துள்ளன.அவையாவன:

 

1.அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா இனரீதியான குடிப்பரம்பலை மாற்றுகிறார்.
2.தமிழர் காணிகளில் முஸ்லிம்களை குடியேற்றுகிறார்.
3.அரச அதிகாரிகள் துணைபோகின்றனர்.
3.ஏனைய சமூகங்களை அமைச்சர் புறக்கணிக்கிறார்.
4.முல்லைத்தீவு,வவுனியா,மன்னார்(வில்பத்து)போன்ற பகுதிகளில் 18000 ஏக்கர் காணிகளை அமைச்சர் கையகப்படுத்தியுள்ளார்
5.காணி அமைச்சர்,ஜனகபண்டார தென்னக்கோன் அவர்கள் காணி விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை.

 

   இக்கருத்துக்கள் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பொதுபலசேனவின் பேச்சாளர்,சமில லியனகே அவர்களாலும்,நிறைவேற்று அதிகாரி  திலங்க விதானகே அவர்களாலும் வெளியிடப்பட்டவை ஆகும்.இதன் நோக்கங்களாவன

 

அ.அமைச்சரை இனவாதியாகவும்,சூழலை அழிப்பவராகவும்,காணிகளை அடாத்தாகப் பிடிப்பவராகவும் போலிப்பிரசாரத்தை முடுக்கிவிடுதல்
ஆ.தமிழ் முஸ்லிம் உறவைச்சீரழித்தல்.
இ.தமிழ்,சிங்கள மக்களுக்குச ;செய்துள்ள அபிவிருத்திகளையும்,வழங்கியுள்ள வேலைவாய்ப்புக்களையும் இருட்டடிப்புச்செய்தல்
ஈ.அமைச்சரின் நற்பெயரை தேசியரீதியிலும்,சர்வதேசரீதியிலும் கெடச்செய்ய முயலுதல்.

 

          அமைச்சர் வவுனியாவின் இனப்பரம்பலை மாற்றுகிறார் என்பது அப்பட்டமான பொய் .வவுனியாவைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களைத் தவிர வேறுயாரையும் அமைச்சர் குடியேற்றவில்லை.இதனை வவுனியா அரச அதிபரும் அறிவார்.

 

          தமிழர் காணிகளில் மு;ஸ்லிம்கள் குடியேற்றப்படுகிறார்களாம் .இது உண்மையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கலாம்தானே.இதுவும் ஆதாரமற்ற பொய்யாகும்.

 

       அரச அதிகாரிகளுக்கு அரச சுற்று நிருபங்கள் தெரியும்தானே இதை அறிந்தவர்கள் சட்டத்திற்கு முரணாக எதிலும் ஈடுபடமாட்டார்கள்.

 

      அபிவிருத்தி,தொழில் வாய்ப்பு என்பவற்றில் எவ்விதப்பாகுபாடும் காட்டப்பட வில்லை என்பதை நேரடி களவாய்வுழுலம் கண்டுகெர்ள்ளலாம்.

 

      1990 ல் வெளியேற்றப்பட்ட 20.000முஸ்லிம் குடும்பங்களும்  இயற்கையான சனத்தொகை அதிகரிப்பின் பின்னரும் அதே தொகையில்தான் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டது.(அறியாமை)

 

 அமைச்சர் சட்டவிரோதமாக தனக்கென ஒரு ஏக்கர் காணியைக்கூட பிடிக்கவில்லை.காணியமைச்சரின் அனுமதியுடன்  அரசகாணிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக காணி;க் கச்சேரிகள் முலம் பெற்றுக்கொடுக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.இதை எப்படி அமைச்சர்மீது பழியாக்குவது.சட்டப்படி நடைபெறும் காணிக் கையளிப்புக்களை ஏன் காணியமைச்சர் தடுக்க வேண்டும்.ஒரு பொய்யை ஆயிரம் தடவை உரத்துச் சொன்னாலும் பொய் ஒரு போதும் உண்மையாகாது.

Web Design by Srilanka Muslims Web Team