அமைச்சர் றிஷாதை போன்று, வேறு யாராவது வில்பத்து விடயத்தை உறுதியாக பிடித்துக்கு நிற்பார்களா? » Sri Lanka Muslim

அமைச்சர் றிஷாதை போன்று, வேறு யாராவது வில்பத்து விடயத்தை உறுதியாக பிடித்துக்கு நிற்பார்களா?

risha

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஹபீல்.எம்.சுஹைர் )


இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற மிகப் பெரும் சவால்களில் ஒன்றாக வில்பத்து பிரச்சினையை சுட்டிக்காட்டலாம். அந்த பிரச்சினை அடிக்கடி எழுந்துகொண்டே இருக்கின்றது. அவ்வாறு எழும் போதெல்லாம், அதனை எப்படி எப்படியெல்லாம் சமாளிக்க முடியுமா, அத்தனை விதத்திலும் சமாளித்துக்கொண்டிருப்பவர் அமைச்சர் றிஷாத் மாத்திரமே.

வேறு யாரையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட முடியாது. இது அந்த மக்களுக்கு மாத்திரமல்ல, இலங்கை மக்களுக்கே நன்றாக தெரியும். இதற்காக எத்தனையோ வழக்குகளை அவரது தொழில் சுமந்து வருகிறார். எதிர்வரும் ஐந்தாம் திகதி கூட, ஒரு வழக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

நன்றாக சிந்தித்து பாருங்கள்..! இது தேர்தல் காலம். இந்த காலத்தில் ஒரு அரசியல் பிரதிநிதி எவ்வாறு செயற்படுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அமைச்சர் றிஷாத் இலங்கை பூராகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந் நேரத்தில் இப்படியான ஒரு வழக்கை எதிர்கொள்வது மிகவும் சவாலானது. ஒரு நாள் அதற்கென்றே அவர் நேரம் செலவு செய்ய வேண்டும்.

இது தேர்தல் காலம் என்பதால், பல  நாட்கள் முன்பே, தான் திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்வுகள் குழம்பி போய்விடும். இது அவருக்கு பெரும் தலையிடியை வழங்கும். அவர் இந்த தலையிடியை யாருக்காக எதிர்கொள்கிறார்?

அமைச்சர் ஹக்கீம் மறைந்த தலைவர் உருவாக்கிய மு.கா என்ற மா பெரும் விருட்சகத்தின் தலைவராக உள்ளார் ( தற்போது மு.காவானது அழிவின் விளிம்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ) இவர் இதற்காக ஒரு பிரச்சினையாவது முன்னின்று எதிர்கொண்டுள்ளாரா? இவர் மீது இனவாதிகளின் ஒரு வழக்காவது உள்ளதா..?

அன்று தீகாவாபி பிரச்சினை தோன்றிய போது, மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மதிப்புக்குரிய சோம தேரருடன் விவாதம் செய்தது போன்ற, எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தார். அதே விதத்தில் இன்று இனவாதிகள் மூலம் தோன்றக் கூடிய பிரச்சனைகளை அமைச்சர் றிஷாதே எதிர்கொண்டு வருகிறார். இதனை நன்றாக சிந்திப்போர் அறிந்துகொள்ள முடியும்.

தற்போதெல்லாம்  பல கோணத்திலும் இலங்கை முஸ்லிம்கள், இனவாதிகளின் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால். இதனையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவராக, இன்றுள்ளவர்களில் அமைச்சர் றிஷாதை மாத்திரமே கை நீட்டிக் காட்டலாம். இதனை வைத்து சிந்திப்போர், இன்று இலங்கை முஸ்லிம்களின் தலைவராகும் தகுதியும் தேவையும் அமைச்சர் றிஷாதுக்குள்ளது.

இப்படியான மர்ஹூம் அஷ்ரபிடம் இருந்த, அமைச்சர் றிஷாதிடம் உள்ள பண்புகளை அமைச்சர் ஹக்கீமிடமெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இன்றெல்லாம் அமைச்சர் ஹக்கீம் ஒரு ஊடகத்தின் முன் நின்று, ஊடகவியலாளர்களின் வினாக்களுக்கு பதில் வழங்க அஞ்சுகிறார். எந்த ஊடகத்தின் முன் செல்வதுமில்லை. இப்படியானவர் எவ்வாறு இனவாதிகளுடன் மோதுவார்.

இதற்குள் இவர் ஒரு சட்டத்தரணியும் கூட.  அமைச்சர் றிஷாதோ ஊடகங்களின் முன் தைரியமாக சென்று சிங்கத்தை போன்று கர்ச்சிக்கின்றார். இதுவே, மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம். மர்ஹூம் அஷ்ரபை போன்று மக்களுக்காக போராடும் அமைச்சர் றிஷாதா, பிரச்சினை என்றாலே ஓடி ஒளியும் அமைச்சர் ஹக்கீமா?

Web Design by The Design Lanka