அமைச்சர் விமல் உள்ளிட்ட 27 ஆளும் கட்சியினர் அவசரகால சட்ட வாக்கெடுப்பிலில் பங்கேட்க வில்லை - ஆளும் கட்சிக்குள் பரபரப்பு..! - Sri Lanka Muslim

அமைச்சர் விமல் உள்ளிட்ட 27 ஆளும் கட்சியினர் அவசரகால சட்ட வாக்கெடுப்பிலில் பங்கேட்க வில்லை – ஆளும் கட்சிக்குள் பரபரப்பு..!

Contributors

அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக அரசின் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் என 27 பேர் வாக்களிப்பிற்கு சமுகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வாக்களிக்க வருகை தராதவர்களில் 9 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் மற்றும் ஆறு பேர் வெளிநாட்டில் உள்ளனர். ஆளும் கட்சி எம்பி கபில அத்துகோரள வரும்போது, ​​வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

அதுரலிய ரத்ன தேரர்,விமல் வீரவன்ச, எஸ். வியாழேந்திரன், ஏ. எல். எம். அதாவுல்லா,விஜயதாச ராஜபக்ச மற்றும் அசோக பண்டாரியந்த ஆகியோர் வாக்கெடுப்பில் சமுகமளிக்கவில்லை அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

எதிர்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவிய முஸ்லிம் எம்.பிக்களாகிய அலிசப்ரி ரஹீம், பைஷல் காசிம், எம.எச்.எம். ஹாரிஸ், எம்.எஸ். தௌபிக், நஷீர் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்களும் வாக்கெடுப்பில பங்கேற்கவில்லை.

எவ்வாறாயினும் எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அரவிந்தகுமார், இஷாக் ரஹ்மான், எம். முஷாரப் உள்ளிட்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team