அமைச்சுக்களின் செயலாளர்கள் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்படுவர்..! - Sri Lanka Muslim

அமைச்சுக்களின் செயலாளர்கள் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்படுவர்..!

Contributors

அமைச்சுக்களின் அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத மற்றும் ஒத்துழைப்புகளை வழங்காத அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இந்த பிரதான அதிகாரிகள் பயணக் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி வீடுகளிலேயே தங்கியுள்ளனர் எனவும், எந்த பணிகளையும் செய்வதில்லை என்றாலும் அனைவரும் சம்பளத்தை மாத்திரம் பெற்றுக்கொள்வதாக அமைச்சர்கள் பலர் செய்த முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த நியமனங்களை தான் வழங்கி இருந்தாலும் நாடு அல்லது அமைச்சின் முன்னேற்றத்திற்காக அபிவிருத்தி பணிகளை செய்யாத அதிகாரிகள் பற்றிய தகவல்களை தமக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team