அமைச்சை பெற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஆதரவா..? - Sri Lanka Muslim

அமைச்சை பெற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ஆதரவா..?

Contributors

அ.இ.ம.கா தலைவரின் ஆசீர்வாதத்துடனேயே சிலர் அமைச்சுக்களை ஏற்க போவதான பேச்சுக்களை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு நோக்க கூடியதான கதையாடல்களை சிலர் சமூக வலைத்தளங்களில் முடுக்கி விட்டுள்ளனர். இது வழமை தானே!

அ.இ.ம.கா தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இன்றோடு 80 நாட்கள் நிறைவுற்றுள்ளன. அவர் சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பது யாவரும் அறிந்ததே!

இன்று விடுவிக்கப்படுவாரா, நாளை விடுவிக்கப்பட மாட்டாரா என்ற ஏக்கத்தில் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் உள்ளனர். அவரது குடும்பம் படும் துயரத்தை அண்மையில் பா.உ இஷாக் ரஹுமான் பாராளுமன்றத்திலும் கூறியிருந்தார். இந் நிலையில் ஆட்சியாளர்கள் யாராவது அமைச்சை ஏற்குமாறு கூறி காலில் விழுந்தாலும், ஏன் அ.இ.ம.கா தலைவரே ஏற்குமாறு கூறினாலும், ஒரு மானமுள்ள உண்மையான அ.இ.ம.கா ஆதரவாளன், அ.இ.ம.கா தலைவரால் பாராளுமன்றத்தை அடைந்தவன் ஒரு போதும் ஏற்க மாட்டான். மானமா..? அது என்ன விலை என இவர்கள் என்னிடம் கேட்பார்களோ தெரியவில்லை.

அமைச்சை பெற வியூகம் வகுக்க முடிந்த உங்களால், அவரை விடுவிக்க வியூகம் வகுக்க முடியவில்லையே! இவ்வாறான நிலையில், அவர் சொல்லியே அமைச்சை ஏற்கப் போகிறோம் என கூற வெட்கமில்லையா? சூடு, சொரணை சிறிதேனும் இருப்பவனும் இவ்வாறு கூற மாட்டான்.

அவரை விடுவித்தால், அவரே நேரடியாக, தனது ஆதரவாளர்களிடம், தனது நிலைப்பாடு பற்றி கூறுவாரே! இப்படி சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைக்க தேவையில்லையே! முதலில் அவரை விடுவிக்கும் முயற்சிகளை செய்யுங்கள்.

அமைச்சை பெறுங்கள் அல்லது பெறாமல் இரியுங்கள். அதனுள் அ.இ.ம.கா தலைவரை நுழைத்து, அவரை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டாம். அவர் உங்களை அமைச்சை ஏற்குமாறு கூறும் சிந்தனையுடையவராக இருந்திருந்தால், இந்நேரம் வெளியில் இரிந்திருப்பார்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team