அமைதிக்கான நோபல் பரிசு » Sri Lanka Muslim

அமைதிக்கான நோபல் பரிசு

nobe;

Contributors
author image

Editorial Team

2017 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதங்களை தடை செய்ய கோரும் “ஐகேன்” அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.

வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் அல்லது மருத்துவம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசு ஐகேன் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை தடை செய்ய கோரும் “ஐகேன்” அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசு கமிட்டியின் தலைவர் ரெய்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.

nobe;

Web Design by The Design Lanka