அம்­பா­றையில் நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­படும் காணி­களின் பரப்­ப­ளவில் வீழ்ச்சி. - Sri Lanka Muslim

அம்­பா­றையில் நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­படும் காணி­களின் பரப்­ப­ளவில் வீழ்ச்சி.

Contributors

அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட 05 ஆயிரம் முதல் 06
ஆயிரம் ஹெக்டெயர் வரையிலான காணிகளில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இம்முறை நெற் செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் பரப்பளவில் வீழ்ச்சி ஏற்படும் என அம்பாறை மாவட்ட விவசாயப் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார் .
அவர் மேலும் கூறுகையில் , கடந்த பெரும்போகத்தோடு ஒப்பிடுகையில் இந்த முறை 05 ஆயிரம் முதல் 06 ஆயிரம் ஹெக்டெயர் காணிகளில் நெற்செய்கை நடவடிக்கை இடம்பெறமாட்டாது .
கடந்த பெரும் போகத்தில் நெற்செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்ட காணிகளில் 05 ஆயிரம் முதல் 06 ஆயிரம் ஹெக்டெயர் காணிகள் இம் முறை கரும்புச் செய்கைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன .
இறக்காமம் மற்றும் தமன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே மேற்படி 05 ஆயிரம் தொடக்கம் 6 ஆயிரம் ஹெக்டெயர் பரப்பளவுள்ள காணிகளில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது . அந்த வகையில் இம்முறை பெரும்போகத்தில் அம்பாறை மாவட்டத்தில் 65,000 தொடக்கம் 70,000 ஹெக்டெயர் வரையிலான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார் .

Web Design by Srilanka Muslims Web Team