அம்­பாறை மாவட்­டத்­திற்கு அகில இலங்கை ஜம்­மி­ய்யத்துல் உலமா சபை நிர்­வா­கிகள் விஜயம் - Sri Lanka Muslim

அம்­பாறை மாவட்­டத்­திற்கு அகில இலங்கை ஜம்­மி­ய்யத்துல் உலமா சபை நிர்­வா­கிகள் விஜயம்

Contributors

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை நிர்வாகிகள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்
செய்து பிரதேச ஜம்மிய்யத்துல் உலமா சபைகளின் பணிகள் செயற்பாடுகளைப் பார்வையிடவுள்ளதாக அம்பாறை மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ. அன்சார் மெளலானா தெரிவித்தார் .
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஜம்மிய்யத்துல் உலமாக்களின் தற்போதைய நிலை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் கூறுகையில் ,
அம்பாறை மாவட்டத்தில் பிரதேச ரீதியாக உள்ள ஜம்மிய்யத்துல் உலமா சபைகளில் சில எந்தவித செயற்பாடுகளுமின்றி உள்ளன . உலமா சபை நிர்வாகிகளைக் கூட ஜமாஅத்தினர் அறிந்துகொள்ளாத நிலையுள்ளது . நீண்ட காலம் பொதுக் கூட்டங்களை நடத்தி புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டதாகவும் தகவல்களில்லை .
மார்க்க விடயங்களில் பிரதேச மக்களை அறிவுறுத்தும் விடயங்களில் சில உலமா சபைகள் தூரமாகியுள்ளன . குறைந்தது அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தீர்மானங்கள் , முடிவுகளைக் கூட ஜமா அத்தினருக்கு தெரியப்படுத்துவதில்லை என்ற குறைபாடு மக்களிடமுண்டு . இதேவேளை மாணவர்களுக்கு அல் குர்ஆனை கற்றுக்கொடுக்கும் மத்ரஸாக்களைக் கூட உலமா சபைகள் கவனிப்பதில்லை .
வாராந்த ஜும் ஆப் பிரசங்கங்களை நிகழ்த்தும் உலமாக்களுக்கும் பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்களுக்கும் பயிற்சி வழங்கவேண்டிய தேவை அவசியம் ஏற்பட்டுள்ளது . அதிகமான உலமாக்கள் உள்ள போதிலும் குறிப்பிட்ட சிலரே ஜும்ஆப் பிரசங்கப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . ஜும்ஆப் பிரசங்கத்தின் போது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய விடயங்கள் , நேர ஒழுங்கு என்பன குறித்தும் விளக்கமளிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது .
பள்ளிவாசல்களின் முஅத்தின் கடமையிலுள்ளவர்கள் தெளிவான மார்க்க அறிவின்றிப் பணியாற்றி வருகின்றனர் . அதான் கூறுவதிலும் இகாமத் கூறுவதிலும் அட்சர சுத்தமில்லை . சில பிரதேசங்களில் முஅத்தின் – பொது மக்கள் உறவு திருப்திகரமாக இல்லை .
பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களின் பணிப்பை உதாசீனம் செய்து தாங்கள் நினைத்த மாத்திரத்தில் முஅத்தின்கள் பணியாற்றி வருகின்றனர் .
பள்ளிவாசல்களை திறத்தல் , மூடுதல் விடயத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் . இவை போன்ற விடயங்களில் சபை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார் .tn

Web Design by Srilanka Muslims Web Team