அம்பதென்ன பள்ளிவாசல் தாக்குதல்; அடுத்த கட்டம் என்ன? - Sri Lanka Muslim

அம்பதென்ன பள்ளிவாசல் தாக்குதல்; அடுத்த கட்டம் என்ன?

Contributors

-அஸ்லம் அலி –

அம்பதென்ன மஸ்ஜித்துல் பலாஹ்வை தாக்கிய சந்தேக நபர்கள் விடுவிக்க பட்ட நிலையில் தாக்கபட்ட மஸ்ஜித்துக்கு   கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி முதல் தொடராக 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக மஸ்ஜித் நிர்வாக தலைவர் சமீம் ஹாஜியாரிடம் வினவியபோது தாக்குதல் நடாத்தப்பட்ட தினத்திலிருந்து 24 மணித்தியால பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது . கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப் பட்டபோது நாங்கள் நீதி மன்றம் செல்லவில்லை .

 

எம்முடன் பிரதேசத்தியுள்ள விஹாரைகளின் தேரர்கள் பேசினார்கள் , அவர்களின் ஒருவர் சம்பந்தப் பட்டவர்கள் சட்டத்தினால்  தண்டிக்கப் படவேண்டும் என்றார் , இந்த சம்பவத்தால் தான்  மிகவும் வெட்கம் அடைகிறேன் என்று தெரிவித்தார் . இன்னும் சிலர் சமாதானமாக போவதே சிறந்தது என்று கூறினார்கள் , நாங்களும் சமாதானமாகவே அணுக விரும்புகிறோம் .இது சமாதானம் தொடர்பாக ஒரு தேரர் எம்முடன் பேசினார் ஆனால் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்ட பட்ட பின்னர் எவரும் எம்முடன் பேசவில்லை .

 

நாங்கள் இது தொடர்பாக இறுதி முடிவு ஒன்றை எடுக்க பலருடன் பேசி வருகிறோம் . இந்த விடயம் தொடர்பாக ஆராய பள்ளி நிர்வாகம் ஒரு குழுவை நியமித்துள்ளது அந்த குழு இது தொடர்பாக இறுதி தீர்மானத்தை எதிர்வரும் வியாழக் கிழமை எடுக்கும் என்றும்  சமீம் ஹாஜி தெரிவித்தார் .

 

அதேவேளை பொலீசார் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது தொடர்பில் அறிய முடியவில்லை. நீதிமன்றத்தில் ஐந்து சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது பள்ளி நிர்வாகம் நீதிமன்றம் செல்லவில்லை என்பதுடன் சட்ட நடவடிக்கைகளை விடவும் சமாதனத்தை விரும்பும்  நிர்வாகம் சமாதானத்தை உரிய அணுகுமுறையின் அணுகிவருகிறதா என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது

 

சட்ட நடவடிக்கை அல்லது சமாதானம் என்பது உரியமுறையில் அணுக்கப்பட்டு சிறந்த முடிவு எட்டப் படவேண்டும் என்பது   பிரதேச முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும் . இது தொடர்பில் கருத்துரைத்த பிரதேச வாசி ஒருவர்  சட்ட நடவடிக்கையோ அல்லது சமாதான நடவடிக்கையோ எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக உரிய முறையில் அணுக்கப் படவேண்டும் பிரச்சினைகளை விட்டு ஒதுங்கி விடுவதால் நிரந்தரமான சமாதனத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றார்..

 

அதேவேளை கடந்த வெள்ளிகிழமை அக்குறணை நகரில் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அஸாத் சாலி தலமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றது. அங்கு பேசிய ஆஸாத் சாலி இன்று நாங்கள் அமைதியான ஆர்ப்பாட்டத்தை நடாத்தினோம் எதிர்வரும் வெள்ளி கிழமைக்கு முன்னர் DIG தாக்குதலுடன் தொடர்பு பட்ட 20 போரையும் கைது செய்யாவிட்டால் கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உண்ணாவிரத போராட்டத்தை நடாத்துவோம் அவர்கள் கைது செய்யப்படும் வரை வீடுகளுக்கு செல்லமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Web Design by Srilanka Muslims Web Team