‘அம்பலந்துவையின் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

‘அம்பலந்துவையின் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

boopp

Contributors
author image

M.S.M.ஸாகிர்

பாணந்துறை அம்பலந்துவைக் கிராமத்தின் வரலாற்றை நூலாக வெளியிடும் நூல் வெளியீட்டு விழா, அதிபர் றிஸ்மி மஹ்ரூப் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அம்பலந்துவை இல்மா முஸ்லிம் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

‘அம்பலந்துவையின் வரலாறு’ எனும் மகுடத்தில் அமைந்த இந்நூலில், கிராமத்தின் வரலாறு, பாடசாலை, பள்ளிவாசல்களின் வரலாறு என்பன இடம்பெற்றுள்ளன.

நூலின் நயவுரையை அதிபரும் ஊடகவியலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி வழங்கவுள்ளதோடு, சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆலோசனை வழிகாட்டல் விரிவுரையாளர் முஹமட் அஸ்ரின் கலந்து கொள்வார். இவ்விழாவில் உலமாக்கள், கல்விமான்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Web Design by The Design Lanka