அம்பலந்துவை அல்/இல்மா பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிப்பு! - Sri Lanka Muslim

அம்பலந்துவை அல்/இல்மா பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கௌரவிப்பு!

Contributors

களுத்துறை கல்வி வலயத்தில் அமைந்துள்ள அம்பலந்துவை அல்/இல்மா முஸ்லிம் வித்தியாலயம் பல வழிகளிலும் வளர்ச்சியடைந்து, கல்வித்துறையில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும்,  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் கற்றுக்கொண்டிருக்கும் இல்மாவின் மாணவர்கள்  இதற்கு சான்று பகர்வதாகவும்  வித்தியாலய அதிபர் ரிஸ்மி மஹ்ரூப் தெரிவித்தார்.

“எமது கிராமம் பாணந்துறை தொகுதியில் சிறிய கிராமமாக இருந்த போதிலும் , இன்று பாராட்டி கௌரவிக்கப்படும் இல்மா கல்விக்கூடத்தின் 23 மாணவர்களால், கிராமத்துக்கு பெருமை உண்டாவதாகவும்” அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் சமூகநல ஆர்வலர்களாக பாடுபட  வேண்டும். இதன்மூலம், கிராமத்தின் கல்விச் சூழல் எதிர்காலத்தில் மேலும் பிரகாசமாகும்  என அவர் தெரிவித்தார்.

பாணந்துறை கோட்டக் கல்விப் பிரிவின் இல்மா முஸ்லிம் வித்தியாலயத்தில், கட‌ந்த 2020/2021 கல்வியாண்டில் க.பொ.த சா.த மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா, அண்மையில் வித்தியாலய மண்டபத்தில், அதிபர் ரிஸ்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

இல்மா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழாவில், சமூகநல தன்னார்வ தொண்டு நிறுவன தலைவரா ஹனான் ஹுசைன் பிரதம அதிதியாகக்  கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரி மற்றும் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். சமூகசேவையாளர் ஹனான் ஹுசைன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அம்பலந்துவை ஜும்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.சைத், பழைய மாணவர் சங்க செயலாளர் முகமத் கவுஸ், தனாதிகாரி எம்.பாஹிர் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் விழாவில் கலந்துகொண்டனர்.

எம்.எஸ்.எம்.முன்தஸிர்

Web Design by Srilanka Muslims Web Team