அம்பாறையிலிருந்து கொழும்பு செல்லும் பயணி ஒருவரிடம் 2,500 ரூபா அறவீடு : கெமுனு விஜேரத்ன..! - Sri Lanka Muslim

அம்பாறையிலிருந்து கொழும்பு செல்லும் பயணி ஒருவரிடம் 2,500 ரூபா அறவீடு : கெமுனு விஜேரத்ன..!

Contributors

மாகாணங்களுக்கு இடையிலான தூர சேவைகளில் ஈடுபட்டுள்ள சில தனியார் பஸ்களில் அம்பாறை யிலிருந்து கொழும்புக்குச் செல்லும் பயணி ஒருவரிடம் 2,500 ரூபா வசூலிக்கப்படுவதாகத் தனியார் பஸ் உரி மையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல் படுத்தப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளின் கீழ் இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தில் சில அரசியல்வாதிகளின் தலையீடுகளும் சில அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப் பதாகவும் தெரியவந்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமற்ற இந்த நடவடிக்கையை நிறுத்திவிட்டு, மாகாணங் களுக்கு இடையேயான பஸ் சேவைகளுக்கான முறையான திட்டத்தை வகுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மாகாணங்களுக்கு இடையேயான பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாகாணங்களுக்கு இடையேயான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் உரிமையாளர்கள், ஊழியர்கள் நெருக்கடிக்குள்ளாகி யுள்ளதுடன் பயணிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team