அம்பாறை அபிவிருத்தி தொடர்பில், மாவட்ட எம்.பிக்களின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல்..! - Sri Lanka Muslim

அம்பாறை அபிவிருத்தி தொடர்பில், மாவட்ட எம்.பிக்களின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல்..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

அம்பாறை நகர திட்டமிடல் குறித்த சிறப்பு கலந்துரையாடல் இன்று (16) இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் தலைமையில் அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அம்பாறை நகரத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் அம்பாறை பொதுச் சந்தையின் வளர்ச்சி, நடைபாதைகள் திறத்தல், அரசு குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியை ஒரு வர்த்தக நகரமாக மாற்றுவது, பொது பூங்காவை நிர்மாணித்தல் மற்றும் வனவிலங்கு மண்டலத்தின் விடுதலை குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ. டி. வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம் எல். பண்டாரநாயக்க உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team