அம்பாறை கரையோர உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் - Sri Lanka Muslim

அம்பாறை கரையோர உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம்

Contributors
author image

Aslam S.Moulana

அம்பாறை கரையோர உள்ளூராட்சி மன்றங்களின் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம்!

 

கல்முனை மாநகர சபை உட்பட அம்பாறை மாவட்டத்தின் கரையோர உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற ஒரு தொகுதி ஊழியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

இவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

 

கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை  மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரும் இவ்வைபவத்தில் அதிதிகளாகக் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ் வரவேற்புரையையும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி நன்றியுரையையும் நிகழ்த்தினர்.

 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் கரையோர உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற சுமார் 250 சிற்றூழியர்களுக்கு    நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

 

இவர்களுள் கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 61 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதுடன் இம்மாநகர சபைக்கு புதிதாக  உருவாக்கப்பட்ட தீயணைப்பு படைப் பிரிவுக்கு 11 பேர் நியமனம் செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.வாசித், இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் ஜெபீர் மௌலவி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.எம்.அமானுல்லா உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பலரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

najeeb a majeeth1

 

najeeb a majeeth1.jpg2

 

najeeb a majeeth1.jpg2.jpg3

 

najeeb a majeeth1.jpg2.jpg3.jpg4

 

najeeb a majeeth1.jpg2.jpg3.jpg6

 

najeeb a majeeth1.jpg2.jpg5

 

nn1

 

nn2

Web Design by Srilanka Muslims Web Team