அம்பாறை - கிந்தோட்டை சம்பவ பாதிப்புகளுக்கும் நஷ்டஈடு தருக » Sri Lanka Muslim

அம்பாறை – கிந்தோட்டை சம்பவ பாதிப்புகளுக்கும் நஷ்டஈடு தருக

kandy

Contributors
author image

Editorial Team

கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு துரித கதியில் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்­டு­வரும் அதே­வேளை, அம்­பாறை மற்றும் கிந்­தோட்டைப் பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நீண்ட கால­மா­கியும் இது­வரை நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டாமை குறித்து அப்­ப­கு­தி­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் புனர்­வாழ்வு, வடக்கு அபி­வி­ருத்தி மீள் குடி­யேற்றம் மற்றும் இந்து சமய விவ­கார அமைச்­சிடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

கண்டி வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள் மேற்­கொண்ட அதிதீவிர முயற்­சி­களை அம்­பாறை மற்றும் காலி மாவட்ட அர­சி­யல்­வா­திகள் மேற்­கொள்­ள­வில்லை என பாதிக்­கப்­பட்ட மக்கள் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

கண்டி வன்­செ­யல்­களில் 636 சொத்­துகள் பாதிக்­கப்­பட்­டன. இவற்றுள் முதலாம் கட்­டத்தில் 125 சொத்­து­க­ளுக்கும் இரண்டாம் கட்­டத்தில் 280 சொத்­து­க­ளுக்கும் ஏற்­க­னவே ஒரு இலட்­சத்­துக்கு உட்­பட்ட நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்டு விட்­டன.

ஏனைய சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை புனர்­வாழ்வு அமைச்சு மேற்­கொண்­டுள்­ளது. 5 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட நஷ்­ட­ஈ­டு­க­ளுக்கு உரித்­தான சொத்­துகள் தொடர்பில் மதிப்­பீ­டுகள் அதற்­கென நிய­மிக்­கப்­பட குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கண்டி வன்­செ­யல்கள் கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்­ற­வை­யாகும்.

இதே­வேளை, கிந்­தோட்டை வன்­செ­யல்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்­பெற்­ற­வை­யாகும். இந்த வன்­செ­யல்­க­ளினால் 142 சொத்­துகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் வீடுகள், கடைகள், வாக­னங்கள் அடங்­கு­கின்­றன.

அம்­பாறை வன்­செ­யல்கள் கடந்த பெப்­ர­வரி 2018 இல் இடம்­பெற்­றன. இந்த வன்­செ­யல்கள் கார­ண­மாக ஒரு ஜும்ஆ பள்­ளி­வாசல் உட்­பட ஹோட்­டல்கள், கடைகள், வீடுகள் என 13 சொத்­துகள் பாதிக்­கப்­பட்­டன.

அம்­பாறை மற்றும் கிந்தோட்டை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான மதிப்பீட்டுப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நஷ்டஈடு கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாது தாமதப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-Vidivelli

Web Design by The Design Lanka