அம்பாறை நிஸ்கா சங்க உறுப்பினராக மீஸான் பௌன்டசனின் பிரதிச் செயலாளரான ஹிஸாம் ஏ பாவா தெரிவானார் !! - Sri Lanka Muslim

அம்பாறை நிஸ்கா சங்க உறுப்பினராக மீஸான் பௌன்டசனின் பிரதிச் செயலாளரான ஹிஸாம் ஏ பாவா தெரிவானார் !!

Contributors
author image

நூருள் ஹுதா உமர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நெஸ்கோ பொது முகாமையாளர் சிறிவர்தனவின் தலைமையில் அம்பாறை மாவட்ட கூட்டுறவு சங்கம் நேற்று (25) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பொதுச்சபையின் உறுப்பினர்களில் ஒருவராக சாய்ந்தமருது ப்ரேவ் (Brave) இளைஞர் கழகத்தின் தலைவர் ஹிஸாம் ஏ பாவா தெரிவு செய்யப்பட்டார்.

அல்- மீஸான் பௌன்டசன் ஸ்ரீலங்காவின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் பிரதிச் செயலாளரான இவர் குரு ஊடக வலையமைப்பின் பணிப்பாளராகவும், SYF ஸ்ரீலங்கா அமைப்பின் ஊடக செயலாளருமாகவும் பதவி வகித்து வருகிறார்.

அம்பாறை மாவட்ட கூட்டுறவு சங்க ஆரம்பிப்பு நிகழ்வில் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரீக, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் அலியார் முபாரக் அலி , அம்பாறை நெஸ்கோ பொது முகாமையாளர் சிறிவர்தன, பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

Web Design by Srilanka Muslims Web Team