அம்பாறை மக்கள் மயிலுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவார்களா? » Sri Lanka Muslim

அம்பாறை மக்கள் மயிலுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவார்களா?

risha

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஜெமீல் அகமட்


அமைச்சர் றிசாத்  அவர்களின் முயற்சியால் ஏழைகளுக்கான அம்பாறை மாவட்ட 50 வீட்டுத்திட்டத்தை தடுக்கும் வங்குரோத்து  அரசியல்வாதிகளின் அரசியல் அதிகாரத்தால் சம்மாந்துறையில் வீடுகளை  கட்டி ஏழைகளுக்கு கொடுக்க காணி பெற முடியாத நிலை ஏற்பட்டது  சாய்ந்தமருதில் அந்த வீட்டை கட்ட முயற்சி செய்த போதும் அங்கும் அரசியல் அதிகாரம் தடையை ஏற்படுத்தியது அதனால் பொத்துவிலில் 50 வீடுகளையும் கட்ட காணி தருவதாக பிரதேச செயலாளர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக   அமைச்சர் றிசாத் அவர்களின் முயற்சியால் அரபு இராஜ்சிய தனவந்தர்களின் கையால் ஹிஜ்ரா புரத்தில் அடிக்கல் வைக்கப்பட்டது.

ஏழைகளுக்காக பல போராட்டத்தின் மத்தியில் காணி எடுத்து வீடு கட்ட சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் பொத்துவில் ஹிஜ்ரா புரத்துக்கு சென்ற ஒப்பந்தங்காரர்களுக்கு கிடைத்தது எதிர்பார்க்காத அதிர்ச்சி தகவல் அது தான் பிரதேச செயலாளர் தற்போது காணி தர முடியாது என்ற மறுப்பறிக்கை.  அதனால்  வீட்டுத்திட்டம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த வீட்டுத்திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்த அரசியல்வாதிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தியுங்கள்.

அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் அவர்கள் அபிவிருத்தி செய்தால் தனது அரசியல் முடிந்து விடும் என்ற அச்சம் கொண்ட வங்குரோத்து  அரசியல்வாதிகள் மறைமுகமாக செய்யும் சதியால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு அம்பாறை அபிவிருத்தியும் தடைப்படுகின்றன. வங்குரோத்து அரசியல்வாதிகள் செய்வதுமில்லை. மற்றவர்களை செய்ய விடுவதுமில்லை. இப்படி கேவலம் கெட்ட அரசியலை செய்து கொண்டு சுகபோகம் அனுபவிக்கின்றனர் இந்த நிலையை மாற்றியமைத்து அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி செய்து சகல மக்களும் இன ஐக்கியத்துடன் வாழ சுயநலவாத அரசியல்வாதிகளை எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஒரங்கட்டி மக்கள் நலன் கொண்ட அமைச்சர் றிசாத் அவர்களை ஆதரித்து வாக்களிக்க மக்கள் முன் வர வேண்டும். அப்படி முன் வராவிட்டால் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுக்கும் உதவாத சமுதாயமாக நாம் வாழ வேண்டிய நிலை ஏற்படும் .

எனவே அம்பாறை மாவட்டத்தில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி மக்கள் நலன் கொண்ட  அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டிய நிலையை மக்கள் உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மக்கள் ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை அம்பாறையில் செய்த நிலையான அபிவிருத்தி என்ன அவர்களின் செயல்களால் சம்மாந்துறையில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளின் தொழில் வாய்புக்காக அமைச்சர் றிசாத் அவர்கள் தனது அமைச்சு மூலம் அமைக்க இருந்த தொழில் பேட்டையை தடுத்தனர்.

SSP மஜீட் அவர்கள் கிழக்கு ஆளுநராக நியமிக்க இருந்த வரலாற்று சரித்திரத்தை தடுத்து பொத்துவில் மண்னுக்கு துரோகம் செய்தனர்.

பொய் வாக்குறுதி கொடுத்து சாய்ந்தமருது கல்முனை மக்களிடையே பகைமையை உருவாக்கியுள்ளனர்.

முஸ்லிம் பிரதேசங்களில் சிலை வைக்க தயாகமகேயுடன் ஒப்பந்தம் செய்து விட்டு இறக்காமம் மாணிக்கமடுவில்  சிலை வைத்தனர். இப்படி சமுதாயத்தின் நலனில் பாதிப்பை வங்குரோத்து அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அம்பாறையில் கீரை கடைக்கு எதிர் கடை ஒன்று  இல்லாத அரசியலே  காரணம் என்று தான் கூறவேண்டும் ஆனால் இன்று எதிர் கடை வந்துள்ளதால் செய்வது அறியாமல் வதந்திகளை பரப்புகின்றனர்.

அமைச்சர் றிசாத் என்ன செய்தார் என்று சிலர் கேட்கின்றனர் அவர் மனித நேயம் கொண்டவர். இறையச்சம் கொண்டவர். அவர் அம்பாறையில் அபிவிருத்தி வேலைகளை செய்ய முன் வரும் போது அம்பாறையில் மக்கள் ஆனையுடன் மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் தடையை ஏற்படுத்தும் போது அரசியல் அதிகாரம் இல்லாததால் அபிவிருத்தி செய்ய  முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றியமைக்க அம்பாறை மாவட்ட மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் கொடுத்து உதவ மயிலுக்கு வாக்கு அளியுங்கள் அதன் பின் அமைச்சர் றிசாத் அவர்களின் அபிவிருத்தியை எந்த தடைகளுமின்றி  அம்பாறை மக்கள் கண்டு கொள்ள முடியும்.

இது வரை காலமும் சிறந்த தலைமையில்லாமல் ஏமாற்றுவாதிகளை ஆதரித்து வாக்களித்து ஏமாற்றம் அடைந்த அம்பாறை மக்களுக்கு தற்போது அரசியல் வியாபாரம் செய்யாத மக்கள் நலன்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமை கிடைத்துள்ளது. இதனால் இன்று மக்கள் எல்லோரும் அமைச்சர் றிசாத் அவர்களை தேசிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர் அதற்கான மக்கள் முடிவை எதிர் வரும் தேர்தலில் மக்கள் மயிலுக்கு வாக்களிக்களித்து உறுதிப்படுத்தவுள்ளனர்.  அதனால் அமைச்சர் றிசாத் அவர்கள் பெரும் மாபெரும் வெற்றி என்பது எமது சமுதாயத்தின் வெற்றி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது .

Web Design by The Design Lanka