அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Contributors

அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. குறித்த மாவட்டத்தின் பிரதேசங்களுக்குள் ஊடுருவும் யானைகள் பயிர்ச் செய்கைகளை துவம்சம் செய்வதுடன் உயிராபத்துக்களையும் ஏற்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இறக்காமம் தமண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரும்புச் செய்கையினை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதுடன் இரவு வேளைகளில் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளவர்களை யானை தாக்கிய சம்பவங்களும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

இதனால் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி, மல்வத்த, இஸ்மாயில்புரம், இறக்காமம் பிரதேச செயலகத்தின் கீழுள்ள வரிப்பத்தான்சேனை, குடுவில், மாணிக்கமடு, தமண பிரதேசத்தின் கீழுள்ள 17ஆம் கட்டை எக்கல்ஓயா, விட்டினாகல, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள தீகவாபி, அஷ்ரப் நகர், 36ஆம் கிராமம் போன்ற பிரதேசங்களிலும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. ஆகவே அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.(jn)elephant

Web Design by Srilanka Muslims Web Team