அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அல் குவைதா, தாலிபான் அமைப்பு - CID விசாரனைகள் ஆரம்பம்..! - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அல் குவைதா, தாலிபான் அமைப்பு – CID விசாரனைகள் ஆரம்பம்..!

Contributors

சர்வதேச தீவிரவாத அமைப்புக்களான அக் குவைதா மற்றும் தாலிபான் உள்ளிட்டவைகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது.

இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு, கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புலனாய்வுப்பிரிவு நடத்திய விசாரணையில், கட்டார், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு அமைப்புக்களிடம் இருந்தும் சுமார் 24 கோடி ரூபா நிதி குறித்த அமைப்பிற்குக் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று சனிக்கிழமை -20- வெளியாகிய திவயின பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team